உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

நவம்பர் 20, 1950வேலுார் மாவட்டம், மாங்காடு கிராமத்தில் சொக்கலிங்கம் - கிருஷ்ணவேணி தம்பதியின் மகனாக 1950ல், இதே நாளில் பிறந்தவர் தேவநாதன் எனும் தேவா. இவர் சென்னையில் குடியேறி, தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றார்.லண்டனில் உள்ள, 'டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்' கல்லுாரியில் மேற்கத்திய இசை குறித்த படிப்பை முடித்தார்.ராமராஜன் நடித்த, மனசுக்கேத்த மகராசா திரைப்படத்திற்கு இசையமைத்தார். அவர் தான், 'தேவா' என இவரது பெயரை மாற்றினார். இவர் இசையமைத்த, வைகாசி பொறந்தாச்சு படத்தின் எட்டு பாடல்களும் ஹிட் ஆனதால் பிரபலமானார்.அண்ணாமலை, ஊர் மரியாதை, இளவரசன், சாமுண்டி, சூரியன்,செந்துாரப்பாண்டி, என் ஆசை மச்சான், பாட்ஷா, அவ்வை சண்முகி,காதல் கோட்டை, பாரதி கண்ணம்மா, வாலி, குஷி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் முன்னணி இசையமைப்பாளர் ஆனார்.கானா பாடல்களால் அறியப்படும், 'தேனிசை தென்றல்' தேவாவின் 74வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை