உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

பிப்ரவரி 7, 1934கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்,ஆவுடைநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியின் மகனாக, 1934ல் இதே நாளில் பிறந்தவர் ஆ.மாதவன். இவரின் தந்தை, திருவனந்தபுரத்தில் உள்ள சாலை அங்காடியில் சிறு வணிகராக இருந்தார். திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவரும் கடைப் பையனாக பணியில் சேர்ந்து, அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தினார். திராவிட இயக்க எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சிறுகதைகள் எழுத துவங்கினார்.மலையாளத்தின் வாயிலாக நவீன இலக்கியத்தை அறிந்த இவர், அந்த பாணியில் தமிழில் எழுதினார். இவரின், 'மோகபல்லவி, கடைத்தெரு கதைகள்' உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகள் புகழ் பெற்றன. இவர், 'புனலும் மணலும், கிருஷ்ணப்பருந்து, துாவானம்' ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். மலையாள எழுத்தாளர் பி.கெ.பாலகிருஷ்ணனின் 'இனி ஞான் உறங்ஙட்டே' என்ற நாவலை, 'இனி நான் உறங்கட்டும்' என்ற தலைப்பில் சாகித்ய அகாடமிக்காக மொழிபெயர்த்தார்.'கலைமாமணி, கேந்திர சாகித்ய அகாடமி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 87வது வயதில், 2021ல் ஜனவரி 5ல் மறைந்தார். பள்ளியில் மலையாளம் படித்து, ஆர்வத்தால் தமிழ் கற்ற எழுத்தாளர் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ