உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு; ஒரே தேர்தல்... என்ன நடக்குமோ தெரியவில்லை : சபாநாயகர் அப்பாவு பேட்டி

ஒரே நாடு; ஒரே தேர்தல்... என்ன நடக்குமோ தெரியவில்லை : சபாநாயகர் அப்பாவு பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: “ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என தெரியவில்லை,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அப்பாவு கூறியதாவது:மக்களால் தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசு, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' எனும் முடிவை எடுத்துள்ளது. லோக்சபா, ராஜ்யசபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தான், அதை நிறைவேற்ற முடியும். இது தான் அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது.மத்திய அரசின் இந்தத் திட்டம், நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரே தேர்தல் என்பதை நினைக்கவே முடியவில்லை. ஒருகட்டத் தேர்தல் என்பது தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். உத்திர பிரதேசம், குஜராத், வடகிழக்கு மாநிலங்களில் ஏழு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் அளவுக்கு மாநிலங்களை தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.மாநில உரிமைகள் பறிப்புமாநிலங்களின் உரிமைகள், கடந்த 2017 முதல் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. 2012ல் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு வந்த பின், மாநிலங்களுக்கான வரி விதிக்கும் உரிமை பறிபோய், பிரிட்டிஷ் ஆட்சி காலம் போல மாறிவிட்டது. தற்போது, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து அதை விரும்பாத மாநிலங்களை அச்சுறுத்தும் வகையில் நிதி மறுக்கப்படுகிறது.நீண்ட காலமாக உள்ள அனைவருக்கும் கல்வி திட்டத்தை நிறுத்தி, மிரட்டல் விடுகின்றனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், 2035ல் தான் 50 சதவீதம் பேரை பட்டதாரி ஆக்குவோம் என்கின்றனர். ஆனால், தமிழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த இலக்கை கடந்து விட்டது. இந்தியாவில், தமிழக கல்விக் கொள்கைதான் முன்னோடியாக உள்ளது. அப்பாவு, தமிழக சபாநாயகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 14:26

உன்னை எவன் கருத்து கேட்டான் ????


ராமகிருஷ்ணன்
செப் 20, 2024 11:52

கொப்பாவு போயி வேலை வெட்டியை பாரு, உங்கிட்ட எவன் கருத்து கேட்டான்.


ஆரூர் ரங்
செப் 20, 2024 11:21

1971 இல் சட்டசபையின் ஆயுட்காலம் ஓராண்டு மீதமிருந்த நிலையிலேயே கருணாநிதி சட்டசபையை கலைத்துவிட்டு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வைத்தது ஏன்? அவர் செய்தால் மட்டும் சரியா?


ஆரூர் ரங்
செப் 20, 2024 11:19

ஊராட்சி சொத்து வரி.தொழில் வணிக வரி, மின் கட்டணம்,பத்திரப்பதிவு கட்டணம் என்று எல்லாவற்றையும் மாநில அரசு இஷ்டத்திற்கு ஏற்றிவிட்டது. அதைப்பற்றி இவருக்குக் வலையில்லை.. ஆனால் REVENUE NEUTRAL எனும் முறையில் வரிகளின் மொத்த அளவை மாற்றாமல் மாநிலங்களுக்கு சமவுரிமையுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் மேற்பார்வையில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி தவறா? அப்போ ஜிஎஸ்டி யில் மாநில அரசின் பங்கை குறைக்க கட்சி மாறிய அப்பாவு வேண்டுகோள் விடுக்கவும்.


Duruvesan
செப் 20, 2024 10:34

ஹிந்து பெயரில் திரியும் மூர்கன், என்னன்னே தெரியாம கருத்து போடுது


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 20, 2024 10:31

தலைவன் உளறிய பிறகும் தான் பேசாமல் இருந்தால் தலைவனுக்கு சந்தேகம் வரும் என்பதால் இந்த தற்குறியும் கக்கிவிட்டது ..........


அசோகன்
செப் 20, 2024 10:11

இந்த கூமுட்டை ஒரே நாடு ஒரே தேர்தல் அப்படினா ஒரே நாளில் இந்தியா முழுவதும் தேர்தல்னு நினைக்குது.....


G.Kirubakaran
செப் 20, 2024 10:00

அப்பாவூ உறுப்பிடியாக எதுவும் செய்யவில்லை


Sridhar
செப் 20, 2024 09:57

உனக்கு எதுவுமே தெரியாது, தேர்தல் நடத்துறதபத்தி தெரியணும்னா அது உன்னோட லெவெலுக்கு சாத்தியப்படாது. அதுனால விட்டுடு, நேர போயி திமுகா உறுப்பினர் அட்டையை வாங்கி வச்சுக்கோ. அதோட, சபாநாயகர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு ஓடிடு. வந்துட்டான்யா கருத்து சொல்ல.


Jysenn
செப் 20, 2024 09:27

ஓ அப்படியா மூணாம் கிளாஸ் வாத்தியாரே. எல்லாரும் தங்கள் தகுதிக்கேற்ப பேசினால் எல்லாருக்கும் நல்லது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை