உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு பெருமாள்-03 :பாவம் தீர...

தினமும் ஒரு பெருமாள்-03 :பாவம் தீர...

தினமும் ஒரு பெருமாள்-03

பாவம் தீர...

திருப்பூரின் மையப்பகுதியில் உள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். இங்கு சயனக்கோலத்தில் பக்தர்களை பார்த்தவாறு காட்சி தருகிறார் பெருமாள். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. எதற்காக இப்படி இருக்கிறார் தெரியுமா... தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் பிரச்னைகளை, தன் பார்வையாலேயே சரி செய்து விடுகிறார் பெருமாள். இவரின் வலப்புறத்தில் அமர்ந்த கோலத்தில் பணத்திற்கு அதிபதியான கனகவல்லித்தாயாரும், இடது புறத்தில் நின்ற கோலத்தில் பூமாதேவியும் தனித்தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். பஞ்சபாண்டவர்களும், ராமானுஜரும் இங்கு வழிபாடு செய்துள்ளனர். தன்வந்திரி, அனுமன், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆழ்வார் சன்னதிகளும் உள்ளன.திருப்பூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:00 மணி -மாலை 5:00 - 8:30 மணி தொடர்புக்கு: 97865 50555அருகிலுள்ள தலம்: அவிநாசி அவிநாசியப்பர் 15 கி.மீ., நேரம்: காலை 6:00 - 1:00 மணி- மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 94431 39503


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை