வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாக்குகளுக்காக இலவசங்கள் கொடுக்க நிதி ஒதுக்கியதுபோக மீதமிருந்தால்தான் வளர்ச்சித்திட்டங்கள்.
ஒரு பாட்டில் விலையில் இன்னொரு ஐந்து ரூ ஏற்றி இருந்தால் போதுமே, பற்றாக்குறை வந்து இருக்காதே
மதுரை: தமிழகத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் தொழில் துவங்க விண்ணப்பித்த 17,629 பேரில், நிதி பற்றாக்குறையால் 2,295 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 2023 - 24ம் நிதியாண்டில் இருந்து, 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்னும் புதிய திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்மூலம் கருவிகள், இயந்திரங்களை கொள்முதல் செய்ய 35 சதவீதம் மூலதன மானியமும், 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் இருந்து 21 மாத காலக்கட்டத்தில், 17,629 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,295 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக், இதுகுறித்து தகவல்களை பெற்றுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில், 1,032 பேர் விண்ணப்பித்த நிலையில், 135 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு பேரும், தேனியில் 10 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.இத்திட்டம் அனைவருக்கும் சென்றடையும் வகையில் கூடுதல் நிதியாக, 500 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஆண்டுக்கு 10,000 பயனாளர்களை உருவாக்க, இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.விண்ணப்பம் நிராகரிப்பின் காரணங்களை அறிய குழு அமைக்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட காரணங்களை இணையதளத்தில், 'அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாக்குகளுக்காக இலவசங்கள் கொடுக்க நிதி ஒதுக்கியதுபோக மீதமிருந்தால்தான் வளர்ச்சித்திட்டங்கள்.
ஒரு பாட்டில் விலையில் இன்னொரு ஐந்து ரூ ஏற்றி இருந்தால் போதுமே, பற்றாக்குறை வந்து இருக்காதே