உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எழுந்தது எதிர்ப்பு

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எழுந்தது எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில், இடஒதுக்கீடு குறித்த முதல்வரின் அறிவிப்புக்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

பணி நியமனம்

இதில், 'அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டம் இயற்றப்படும்' என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:அரசு துறைகளில் பணி நியமனம் என்பது, ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடாக வழங்கலாம். ஆனால், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது, பணிமூப்பு அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த ஒதுக்கீடு முறையில், 'ஜூனியர்' ஊழியர்கள் திடீரென சீனியர்களை தாண்டி, பதவி உயர்வு பெறுவர். இது, ஊழியர்களுக்குள் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும்.கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த கட்சியினரின் நிர்பந்தத்தால், தேர்தல் சமயத்தில் அவர்களை திருப்திபடுத்துவதற்காக, தமிழக முதல்வர் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.பணி நியமனத்துக்கு பின், பணிபுரியும் அனைவரும் சமம் தான். அதன் பின் பணி அனுபவம், தகுதி அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க முடியும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், இதே போல குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதை எதிர்த்து வழக்குகளும் நடந்து வருகின்றன.

புதிய சட்டம்

இதை அமல்படுத்தினால், என்ன பாதிப்புகள் வரும் என்பது முதல்வருக்கும் தெரியும். எனவே, பதவி உயர்வு இட ஒதுக்கீடு விஷயத்தில், புதிய சட்டம் இயற்றக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க., நிலை தி.மு.க.,வுக்கு வரும்!

இது குறித்து அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:கூட்டணி கட்சித் தலைவர் திருமாவளவனை குஷிப்படுத்துவதோடு, வட மாவட்டங்களில் தலித் இன மக்கள் ஓட்டுகளை முழுமையாக பெறும் நோக்கோடு, பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வழிமுறைகளுக்கு முரணானது. இப்படித்தான், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக இருந்த போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்தார். இதற்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும், இப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் மற்ற ஜாதியினர், தங்களுக்கு பாதிப்பு இருப்பதாகக் கூறி, ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வுக்கு எதிராக, கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து விட்டனர். அதேபோன்றதொரு நிலை, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஏற்படும். தலித் அல்லாத பிற ஜாதியினர், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளிக்கக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

SRIDHAAR.R
ஏப் 01, 2025 07:09

வேலைதிறமை உள்ளவர்களுக்கு வேலையை தர மறுப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது


subramanian
மார் 31, 2025 20:57

ஈ வே ராமசாமி திமுக வை தங்க தட்டில் வைத்த ,,,,


Varadarajan Nagarajan
மார் 31, 2025 07:55

சமத்துவம் சமத்துவம் என அடிக்கடி முழங்குகிறீர்கள். பிறகு என்ன ஜாதீய அடிப்படையில் பதவி உயர்வு. அதில் சமத்துவம் கிடையாதா?


Dharmavaan
மார் 31, 2025 07:42

ஒதுக்கீடுகளையே முதலில் நிறுத்த வேண்டும்.. எத்தனை வருடங்கள் இது நீளும் ..அதே போல் மைனாரிட்டி ரைட்ஸ் முழுதும் நீக்கப்பட வேண்டும் .இந்த சலுகை அளிக்கும் /அறிவிக்கும் கட்சி தேர்தலில் தடை செய்யப்பட வேண்டும் .இது மத சார்பற்ற சட்டத்திற்கு எதிரானது .


Ram
மார் 31, 2025 07:28

இடவொதுக்கீட்டையே முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் , அதுதான் நாட்டை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது


Balaji Bakthavathsal
மார் 31, 2025 07:26

கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்பதையாவது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பதவி உயர்வில் ஒதுக்கீடு என்பது ஓட்டிற்காக என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. சமூகத்தில் ஒரு நிலையை எட்டும் வரை ஊக்குவிக்கலாம். பிற போக்கை பார்த்தால் பேருந்துகளில், சினிமா தியேட்டர்களில், ஓட்டல்களில் கூட இட ஒதுக்கீட்டை அமல் படுத்துவார்கள் போலிருக்கின்றது.


ramani
மார் 31, 2025 06:46

இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் முதலில்.


nb
மார் 31, 2025 06:33

மாடல் கட்சி தலைமை பதவிக்கு இட ஒதுக்கீடு இல்லையா?


சூரியா
மார் 31, 2025 06:26

வாழைப்பழத்தைத் தோல் உரித்து, என் வாயில் போடுகிறீர்களே, அதை நான் முழுங்குவதற்கு வசதியாகக் கொஞ்சம் தொண்டைக்குள் குத்திவிட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்?


தாமரை மலர்கிறது
மார் 31, 2025 06:01

இடஒதுக்கீடை ஒழித்தால் தான் இந்தியா முன்னேறும். அதுவரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது.


புதிய வீடியோ