மேலும் செய்திகள்
'செல்பி ஸ்டார்!'
19-Oct-2024
சென்னை: தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதன்படியே, சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இரவில் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது.தமிழகத்தில் வரும் 5ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால், தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 10 மணி வரையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழைப்பொழிவு விவரம் (மில்லி மீட்டரில்)கன்னியாகுமரி மாவட்டம்
தக்கலை - 85.4மாம்பழத்துறையாறு - 83ஆனைக்கெடங்கு - 82.2அடையாமடை - 61.6திற்பரப்பு - 47.2முக்கடல் அணை - 39.2இரணியல் - 24பெருஞ்சாணி - 23.6சேலம் மாவட்டம்
சீர்காழி - 29.2தரங்கம்பாடி - 16செம்பனார்கோவில் - 16ஆத்துார் - 78.6விருதுநகர் மாவட்டம்
தம்மம்பட்டி - 36கோவை மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்துார் - 43பெரியாறு அணை - 21.4மேட்டுப்பாளையம் - 95 திருப்பூர் மாவட்டம்
பெரியநாயக்கன்பாளையம் - 884பில்லுார் அணை - 60சூலுார் - 53விமான நிலையம் - 44.2வாரப்பட்டி - 39சின்னக்கல்லார் - 37சின்கோனா - 37ஆழியாறு - 34.4தொண்டாமுத்துார் - 34பொள்ளாச்சி - 21கிணத்துக்கடவு - 18சிறுவாணி அடிவாரம் - 18மதுக்கரை - 16கோவை தெற்கு - 10திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் ஐ.பி., - 51.6திருப்பூர் தெற்கு - 48திருப்பூர் வடக்கு - 44உடுமலை - 42பல்லடம் - 38கலெக்டர் ஆபீஸ் - 32மடத்துக்குளம் - 27ஊத்துக்குளி - 11ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் - 20.2வரட்டுப்பள்ளம் - 13நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் - 72பரமத்தி வேலுார் - 10.2குமாரபாளையம் - 9.2திருவாரூர் மாவட்டம்
நீடாமங்கலம் - 65முத்துப்பேட்டை - 62மன்னார்குடி - 56
சென்னை
புழல் 35.4டி.வி.கே.நகர் 14.4மதுரை
உசிலம்பட்டி 66கள்ளந்திரி 18.4பெரியப்பட்டி 18குப்பனாம்பட்டி 17.6இடையபட்டி 13தல்லாகுளம் 8புதுக்கோட்டை
மணமேல்குட்டி 60கரம்பக்குடி 23குடுமியான்மலை 20கீழாநிலை 11.2நீலகிரி மாவட்டம்
கீழ்கோத்தகிரி எஸ்டேட் 105வென்ட்வொர்த் 102அலக்கரை 33கோடநாடு 29கோத்தகிரி 23குன்னுார் 20சாம்ராஜ் எஸ்டேட் 13பந்தலுார் 10பர்லியார் 10
19-Oct-2024