உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டட அனுமதி கட்டணம் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவு

கட்டட அனுமதி கட்டணம் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவு

சென்னை:'கட்டுமான திட்ட அனுமதி கட்டணங்களை, ஒரே தலைப்பில் வசூலிப்பது தொடர்பாக, ஊராட்சிகள் வரும் 30ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 3,500 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு, சுய சான்று அடிப்படையில், கட்டட அனுமதி வழங்கும் திட்டம், ஜூலை மாதம் அறிமுகமானது. இதற்காக தனியாக ஒரு கட்டண விகிதம் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த புதிய கட்டண விகிதங்களை, பிற வழக்கமான கட்டட அனுமதி வழங்குவதிலும் கடைப்பிடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த வாரம் வெளியானது. புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்த, ஊராட்சி மன்ற கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எனவே, கட்டுமான திட்ட அனுமதிக்கு, ஒற்றை தலைப்பு கட்டண விகிதங்கள் அடங்கிய தீர்மானத்தை, வரும் 30ம் தேதிக்குள், ஊராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ