உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்டர்லி முறையை ஒழிக்கணும்! டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

ஆர்டர்லி முறையை ஒழிக்கணும்! டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பி.,க்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.காவலர்களை போலீஸ் உயரதிகாரிகளுக்கு உதவியாக பயன்படுத்தும் முறைக்கு ஆர்டர்லி முறை என்று பெயர். 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் காவல்துறையில் இந்த முறை புகுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் உயரதிகாரிகளின் வீட்டு வேலைகள் செய்ய காவலர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந் நிலையில், புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள சிறை வார்டன்கள், காவலர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் பற்றி சி.பி.சி.ஐ.டி., மற்றும் உளவுத்துறை உதவியுடன் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை செயலாளருக்கு ஆணையிட்டு இருந்தது.இன்று (நவ.29) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்துறை செயலாளரின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. காவலர்களை வீடுகள் அல்லது தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.,க்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக அப்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும். வீட்டு வேலைகளை செய்யும் காவலர்களை உடனடியாக சிறைப்பணிக்கு மாற்றம் செய்ய டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த விசாரணை டிச.20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

NATARAJAN R
டிச 01, 2024 12:46

நீதிமன்றம் இதுகுறித்து பல வருடங்கள் முன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அனுப்பும். உடனே நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளும்.


அனுஜா
நவ 30, 2024 06:46

வாய் வார்த்தையா மாட்டிக்காதீங்கன்னு சொல்லியிருப்பாரு. மத்தபடி அவருக்கே நாலு ஆர்டர்லிகள் தேவைப்படும்.


rama adhavan
நவ 29, 2024 22:26

யார் கண்காணிப்பது? யார் திடீர் ஆய்வு செய்வது? யார் தண்டிப்பது? அரசு அதிகாரிகளை ஒன்றும் செய்ய முடியாது.


hariharan
நவ 29, 2024 19:26

இந்த பிரச்சனை காவல்துறையில் மட்டும் இல்லை, எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ரயில்வே இருப்புப்பாதை பொறியாளர்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்வது கலாசிகள் என்னும் கடைநிலை ஊழியர்கள். நீதிமன்றங்களிலும் மாவட்ட ஆட்சியருக்கும் எதற்கு உருமா கட்டிய டவாலிகள். இதெல்லாம் வேண்டாமென்று நீதிபதிகள் சொல்லமட்டார்களா? இதெல்லாம்கூட ஆங்கிலேயன் இங்கு விட்டுச்சென்றது.


Anantharaman Srinivasan
நவ 29, 2024 19:22

மந்திரிகளின் வீடுகள் விதிவிலக்கா..?


Rajan
நவ 29, 2024 19:19

இதையே டைப் அடித்து அடித்து கீபோர்ட் தேய்ந்து போச்சு


C.SRIRAM
நவ 29, 2024 18:45

ஆமாம் . திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளை பிடிக்கணும் என்று அரசு போலீசுக்கு உத்தரவு போட்டாலே போதும் . அதோடு அரசின் பணி முடிந்தது . நல்ல திராவிட மாடல் ?. இதையும் ஒரு பதில் என்று நீதிமன்றத்தில் சொல்கிறார்கள் .


NATARAJAN R
டிச 01, 2024 12:54

உண்மை. பிரச்னை நீதிமன்றம் தான். அரசு சமர்ப்பிக்கும் அறிக்கை மற்றும் உறுதி மொழி போலியானது என்று தெரிந்தும் அரசு சமர்ப்பிக்கும் பொய்யான உறுதி மொழியை ஏற்று வழக்கை முடித்து வைத்து மனுதாரர் அரசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிந்தும் வழக்கை முடித்து மனுதாரரை அவமதிப்பு செய்யும் நீதிமன்றம் குற்றவாளியே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை