மேலும் செய்திகள்
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்பு தானம்
24-Jan-2025
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
31-Dec-2024
சென்னை: கோவை மற்றும் நாகையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவர் உடல் உறுப்பு தானம் மூலம் ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் சக்தி கார்டன் சேர்ந்த 54 வயதான செந்தில்குமார், கேரள மாநிலத்தில் கோழிப்பாறை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய செந்தில்குமார் மூளைச்சாவு நிலையை அடைந்தார்.அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உறுப்பு தானம் பெறப்பட்டது.செந்தில்குமார் உடலுக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மாணவ மாணவியர் பேராசிரியர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் பொள்ளாச்சி தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.வாலிபர் உடல் உறுப்புகள் தானம்: கலெக்டர் மரியாதைநாகை மாவட்டம் பிரதாப ராமபுரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் வீரபாலன்,23. நாகையில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். 23 ம் தேதி, இ.சி.ஆர் சாலையில் பைக்கில் சென்றப் போது நிலை தடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் ஒப்புதல் வழங்கினர்.வீரபாலன் உடலுக்கு கலெக்டர் ஆகாஷ், நாகை மாலி எம்.எல்.ஏ., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
24-Jan-2025
31-Dec-2024