மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள்... போராட்டம்
14-Nov-2024
திண்டுக்கல்:கிண்டியில் அரசு டாக்டர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதை தொடர்ந்து டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த வெளிநோயாளிகளுக்கு டீன் சுகந்திராஜகுமாரி சிகிச்சையளித்தார்.சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கினார். இதில் டாக்டர் பாலாஜி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவ தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இச்சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் நேற்று காலை முதல் டாக்டர்கள் வெளிநோயாளிகளுக்குசிகிச்சை கொடுக்காமல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மருத்துவமனை டீன் சுகந்திராஜகுமாரி,கண்காணிப்பாளர் வீரமணி,துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் காலை 7:30 மணி முதல்வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவில் அமர்ந்து மருத்துவமனைக்கு பல்வேறு பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர். டாக்டர்கள் பற்றாக்குறையை சமாளிக்க பயிற்சி டாக்டர்கள்,மருத்துவ மாணவர்களும் இப்பணியில் ஈடுபட்டுவெளிநோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்தனர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் எந்த பாதிப்பும் இல்லாமல் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டீன் சுகந்தி ராஜகுமாரி கூறியதாவது: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்படுகிறது.எந்த பிரச்சனையும் இல்லாமல்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஏற்கனவே ஒரு இடத்தில் காவல்துறையினரால் செக் போஸ்ட் உள்ளது. கூடுதலாக 2 இடங்களில் கேட்டுள்ளோம் என்றார்.
14-Nov-2024