உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்! சிறப்பு பஸ்களில் வழியும் கூட்டம்

ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்! சிறப்பு பஸ்களில் வழியும் கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் ஒரே நாளில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. பொங்கலுக்காக வரும் (ஜன)14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 1445 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.நேற்று (ஜன.10) மட்டும் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் மூலமாக ஒன்றரை லட்சம் பேர் பயணித்துள்ளனர். தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் விவரங்கள், ஆம்னி பஸ்கள் பற்றிய புகார்களுக்கு 1800 425 6151(கட்டணமில்லா எண்) மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.2ம் நாளாக இன்றும்(ஜன.11) சிறப்பு பஸ்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சிறப்பு ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாமரன்
ஜன 11, 2025 08:49

பாதுகாப்பாக சென்று விடுமுறை கொண்டாடி விளையாட்டு வாருங்கள் மக்களே...


அப்பாவி
ஜன 11, 2025 08:23

பகல்நேர பஸ்கள்.காலியாகச் செல்லும். கூவிக்.கூவி ஏத்திக்கிட்டுப் போவாங்க. நம்மாளுங்களுக்கு ராத்திரியில் தூங்கிக்கிட்டே போகணும்.


தமிழ்வேள்
ஜன 11, 2025 13:46

குடித்துவிட்டு பஸ்ஸில் ஏறி சாய்ந்தால் , அது ஓடுகிறதா , இல்லை புறப்படவே இல்லையா -என்று தெரியாது ....குடிக்காமல் பஸ்ஸில் , இரவு பயணம் செய்யும் தனி ஆண்கள் மிக குறைவு .......குடித்துவிட்டு கிடைப்பதற்காகவே இரவு பயணம் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை