உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகள்: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு

வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகள்: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பறையில் கடைசி பெஞ்ச் என்று எதுவும் இருக்கக் கூடாது, அனைத்து மாணவர்களும் முதல் பெஞ்ச் மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற கருத்துடன் கூடிய மலையாள திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக பள்ளிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவர். முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை எனத் தொடர்ந்து கடைசி வரிசையும் இருக்கும். படிப்பில் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் இருப்பது வாடிக்கை.இத்தகைய வரிசை முறை மாணவர்கள் மத்தியில், வேறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது.அதை மாற்றும் நோக்கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்படுவதை கேரளாவில் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் ' படம் வலியுறுத்தியது. அரைவட்ட வடிவில் இருக்கைகள் போடப்பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்துவார் என்பது, இந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும்.பெரும் வரவேற்பை இந்த நடைமுறை கேரளாவில் பள்ளிகளில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி 8 பள்ளிகளில் இதுபோன்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளா தொடங்கி வைத்த இந்த முறை தற்போது, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் வரை தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. பள்ளிகளில் U வடிவ முறையில் பெஞ்சுகள் அமைக்க நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.இந்நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளில், இந்த நடைமுறையை பின்பற்ற பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களை ஆசிரியர்கள் எளிதாக கவனிக்க முடிவதுடன், கலந்துரையாடலையும் மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வகுப்பறைகளின் அளவு மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த முறையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யும்படி அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்த தலைமை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வகுப்பறைகளில் ஒவ்வொருவரின் குரல்கள் கவனிக்கப்படுவது உறுதி செய்வதன் மூலம், கற்றல் என்பது கலந்துரையாடலமாக அமையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் எதிரெதிர் திசையில் அமரும் போது ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்று கொள்ள முடியும். அனைத்து மாணவர்களும் முன்வரிசையில் அமர்வர். சிறந்த கற்றல் உறுதி செய்யப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

அப்பாவி
ஜூலை 13, 2025 07:04

ரவுண்டா உக்கார வையுங்க. நடுவுல வாத்தியார்


Natarajan Ramanathan
ஜூலை 12, 2025 23:23

ப வடிவம் ஒய் வடிவம் எல்லாம் அபத்தம். ஒரேயொரு கரும்பலகை இருப்பதால் மாணவர்களுக்கு தீராத கழுத்து வலிதான் வரும். மத்திய அரசு பள்ளிகளில் உள்ளது போல மாணவர்களை ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பெஞ்சுகளில் மாறி அமரவைப்பதே சிறந்த முறை.


keerthi win
ஜூலை 12, 2025 22:26

தாமதிக்காமல் செயல் படுத்தவும்


Ramesh Sargam
ஜூலை 12, 2025 22:20

தமிழக அரசு பள்ளிகளில் இதைவிட முக்கியத்தேவை உறுதியான கட்டிடங்கள், சுத்தமான கழிவறைகள், சுகாதாரமான பள்ளி வளாகம் போன்றவைகள்தான். மேலும் பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் போன்ற மதுபானக்கடைகள், மாணவர்கள் மனதை திசை திருப்பும் திரை அரங்கங்கள் இருக்கவே கூடாது. அதை எல்லாம் செய்துவிட்டு, இதுபோன்று ப வடிவ இருக்கை வசதிக்கு வரலாம்.


உண்மை கசக்கும்
ஜூலை 12, 2025 22:17

ஈ அடிச்சான் காப்பி அறிவிலிகளா.. நாள் முழுவதும் கழுத்தை திருப்பி கொண்டு பார்த்தால், மாணவர்களக்கு என்ன என்ன வியாதி வருமோ? இந்த உத்தரவு போட்ட அதிகாரிகள் முதலில் இப்படி உட்கார்ந்து பார்க்க வேண்டும். கடைசி பெஞ்ச் என்று சொல்வது உட்காரும் இடத்திற்காக இல்லை. அவர்களுக்கு படிக்கும் திறன் குறைவு அல்லது அவர்கள் படிக்காமல் வேறு குறும்பு பண்ணுவதால் தான்.


Venkatesh
ஜூலை 12, 2025 22:11

அடுத்தவர்கள் செய்வதை பார்த்து தானும் செய்வதை பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டால் விஷயம் வேறு .ஆனால் தமிழகத்தில் செய்வது மானங்கெட்ட மாடல்


சிந்தனை
ஜூலை 12, 2025 21:48

இத்தனை ஆண்டுகளாக இருந்த கல்வித்துறைக்கு திடீரென அறிவு பிறந்துள்ளது அதிசயம் தான்


Rajarajan
ஜூலை 12, 2025 18:52

இது குழந்தைகளின் கழுத்து மற்றும் பார்வை கோளாறை நிச்சயம் ஏற்படுத்தும். மேலும் தலைவலி மற்றும் வாந்தியை மெதுவாக ஏற்படுத்தும். எப்போதும் நேராக பார்ப்பது மட்டுமே மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்கும். அரசியல் புத்திசாலிகளுக்கு யார் எடுத்து சொல்வது ?


GMM
ஜூலை 12, 2025 18:43

பெற்றோர் ஆசிரியர் மாணவர் கருத்து கேட்டு முடிவு பண்ணலாம் .


Karthi Natraj
ஜூலை 12, 2025 18:15

இது நல்ல யோசனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை