உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலுக்கு கிடங்குகளே தேவை, திமுக அரசின் கடித நாடகம் அல்ல: அண்ணாமலை

நெல் கொள்முதலுக்கு கிடங்குகளே தேவை, திமுக அரசின் கடித நாடகம் அல்ல: அண்ணாமலை

சென்னை: ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e4t40k2o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர். கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ரூ. 309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ரூ.309 கோடி நிதி? நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ரூ.160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30-40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு.கடந்த ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுது போக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்? திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர,திமுகவின் கடித நாடகம் அல்ல.தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த திமுக அரசு?இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

raja
நவ 19, 2025 06:39

என்ன பன்றது ...கேவலம் தேர்தல் நேரத்தில் ருவா ரெண்டாயிரம் ஒசி குவார்ட்டர் கோழி பிரியாணி, மூனுவெளை சோத்த போட்டா திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்துக்கு ஓட்டை போடும் நம் மக்கள் இருக்கும் வரைக்கும் ஊழல் விங்யானி கட்டுமரத்துக்கு தெருக்கு தெரு தமிழக மக்களின் பணத்தை எடுத்து வாரி இரைப்பானுவோ... கிடங்காவது தடுப்பணையாவது... எல்லாம் தமிழனின் தலை எழுத்து...


Gajageswari
நவ 19, 2025 05:18

. FCI. என்ன செய்கிறது


மணிமுருகன்
நவ 18, 2025 23:32

மத்தியஅரசிக்கு கடிதம் என்ற திரைகதை வசனம் மட்டுமல்ல 13 கிடங்குகள் கட்ட ஏற்பாடு என்று ஒரு பொய் திரைகதை வசனம் துப்புரவு தொழிலாளர் களுக்கு சம்பளம் கொடுக்காமல் சிற்றுண்டி என்று ஏமாற்றும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல்ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணி திரைகதை வசனம் நாடகம்


Vasan
நவ 18, 2025 22:02

நவம்பர் 27, 28 தேதிகளில், தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அரசு மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.


ரவிந்திரன்
நவ 18, 2025 17:54

முற்றிலும் உண்மை. இந்த அரசு நான்கரை வருட காலம் ஆட்சி வெத்துவேட்டாக போய்விட்டது. இப்போது தமிழக மக்கள் இதனை உணர்ந்துள்ளார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை