உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநியில் முத்தமிழ் முருகன் உலக மாநாடு: தனி இணையதளம் துவக்கம்

பழநியில் முத்தமிழ் முருகன் உலக மாநாடு: தனி இணையதளம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழநி: பழநியில் முருகப் பெருமானின் பெருமையை உலகறிய, 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' வரும் ஆக.,24, 25ல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கவும், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவும் தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் இந்த ஆண்டு 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை' இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. அதன்படி வரும் ஆக., 24, 25ல் பழநியில் நடைபெறும் இந்த மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவும், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவும் தனி இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. https://www.muthamizhmuruganmaanadu2024.com/ என்ற இணையதளத்தில் கட்டுரைகளை பதிவு செய்யலாம்.மாநாடு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரிசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - 2024 பழனியில் ஆக.,24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டின் குறிக்கோள்கள்

முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் .மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல்.முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல் ஆகும்.மாநாட்டை சிறப்பாக நடத்த, 20 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி குழு அமைக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனர் அரசுக்கு செயற்குறிப்பு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, துறை அமைச்சர் தலைமையில், 20 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை நியமித்துள்ளது. துறை செயலர் துணை தலைவராகவும், கமிஷனர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
மே 28, 2024 19:30

கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியபோது நடவடிக்கை எடுக்காமல் உள்ளுக்குள் மகிழ்ந்த கூட்டம் போலி நாடகமே நடத்துறது.


ஆரூர் ரங்
மே 28, 2024 19:28

கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட காரணமாக இருந்த கூட்டம்.


Anu Sekhar
மே 28, 2024 18:55

எவ்வளவு கோடி அடிக்க பொறீங்க?


Lion Drsekar
மே 28, 2024 17:21

தேர்தல் வருகிறது . 70 ஆண்டுகளாக மூன்று என்ற எழுத்துக்கு நாம் கணட காட்சிகள், இந்த உலகை ஆண்ட முப்பெரும் தலைவர்கள் மட்டுமே . அது எதுவாக இருந்தாலும் சரி, அப்படி இருக்க காலத்துக்கு ஏற்ப இந்த மூன்றுக்கு முருகன் இடத்தில பாராட்டவேண்டியு ஒன்று . இந்த நிகழ்வின்போது பழக்க வழக்கத்தின்படி , முப்பெரும் மன்னர்களின் சரித்திரத்தை புகழ்ப்பாடமால் இருந்தால் நன்றாக இருக்கும், இருந்தாலூம் தற்போதைய மன்னரின் புராணம் கண்டிப்பாக பாடப்படும் . இறைவேனே இல்லை என்ற கொள்கையில் இருந்து வேலைப்பிடித்த கரங்கள், முருகன் இருக்கிறான் என்பதை உணரும் படி செய்த முருகனுக்கு நன்றி. இவையனைத்தும் வாக்குகளாக மாறவேண்டும். அடுத்து ராமர், கிருஷ்ணர் கோவில்களிலும் தேவாரம், திவ்வியப்பிரபந்தம் விழாக்கள் என்று கொண்டாடினால் அந்த வாக்குகளும் சேரும். வாழ்த்துக்கள். ஒரு கட்சியின் பின்னால் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக திரைக்கதை, வசனம், இயக்கம் செய்து தயாரிப்பது என்பது சிலருக்கு கைவந்த காலை, வாழ்க முருகன் . வந்தே மாதரம்


சுந்தரம் விஸ்வநாதன்
மே 28, 2024 16:59

சு ப வீரபாண்டியனை சிறப்பு பேச்சாளராகவும் ஐசக் லியோனியை ஆய்வுரைகள் கண்காணிப்பாளராகவும் அறிவிக்கவும்


sridhar
மே 28, 2024 16:57

நீங்க கொண்டாடாம இருந்தா தான் முருகனுக்கு கௌரவம் , மகிழ்ச்சி எல்லாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 28, 2024 15:28

ஸ்னேக் பாபுதான் குழுவின் தலைவராம். அப்புடியே முருக பக்தியை வளர்த்து கிழிச்சிடுவாரு. சும்மா காசி தமிழ் சங்கத்திற்கு போட்டி உற்சவம். அம்புட்டுத்தான்.


Anu Sekhar
மே 28, 2024 18:53

How much $$$$ are you going to benefit from this drama? How many crores for how many Atheist in your party?


ஆரூர் ரங்
மே 28, 2024 14:02

சனாதனத்தின் ஒரு பகுதியான சமஸ்கிருத ஸ்கந்தபுராணம்தான் முருக வழிபாட்டின் முதல் ஆதாரம்.நான்காம் நூற்றாண்டு காளிதாசரின் குமார சம்பவம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் முருகன் வழிபாடு மொழி கடந்து நாடு முழுவதும் இருந்ததை வெளிப்படுத்துகிறது. சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு( முக்கியமாக 21 ம் பக்க நாத்திகர்கள்)இந்த மாநாடு எதற்கு? ஏமாற்றி வாக்காளர்களை கவர முயலும் கபடவேடதாரிகள்.


திருட்டு திராவிடன்
மே 28, 2024 13:42

அவசியம் வீரமணியை பொருளாளராவும், உதயநிதியை சொற்பொழிவாளராவும் போடுங்க.


karthik
மே 28, 2024 13:29

நாங்கள் தான் தமிழ் இன காப்பாளர்கள் ...ஆன்மீகத்தையும் நாங்கள் தான் காக்கின்றோம் என்று மக்களை நம்ப வைக்க என்ன என்ன நாடகம் போடுகிறார்கள்...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை