உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆட்சி பங்காளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் அரசுக்கு பழனிசாமி கண்டனம்

ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆட்சி பங்காளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் அரசுக்கு பழனிசாமி கண்டனம்

சென்னை:'தமிழகத்தில் ஒரே நாளில், 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருப்பது, தி.மு.க., ஆட்சி யின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில், கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் கொடுமை, காவலரிடம் பாலியல் சீண்டல் என, 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது, தி.மு.க., ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். சங்க காலம் முதல், பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இதுபோன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்குரியது. பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட, இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவுக்கு, தி.மு.க., ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்ற வாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. தி.மு.க., ஆட்சியில், தமிழகம் இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து, எந்த கவலையுமில்லாத முதல்வர் ஸ்டாலின், 'பெண்களுக்கு பாதுகாப்பு' என வாய் சவடால் மட்டும் பேசினால் போதுமா? தி.மு.க., ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.குற்றச் சம்பவங்கள்திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லைதிருப்பூரில் ஒடிசாவைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம்சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலருக்கு பாலியல் சீண்டல்கடலுார் அரசு மாதிரி பள்ளியில், 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்சிதம்பரம் சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள்திருப்பூரில் இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்தஞ்சையில் காதலுனுடன் சேர்த்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்று, வீட்டில் அடைத்து வைத்து, சென்னை சிறுமி பாலியல் பலாத்காரம்புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் ஏழு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர்சென்னை சூளைமேட்டில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த உணவு வினியோக ஊழியர்திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே, போதாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பிளஸ் 1 வகுப்பு மாணவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை