உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி இன்னும் பாடம் கற்கவில்லை சுயநலத்திற்காக கட்சியை அழிக்கிறார்: பன்னீர்..

பழனிசாமி இன்னும் பாடம் கற்கவில்லை சுயநலத்திற்காக கட்சியை அழிக்கிறார்: பன்னீர்..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இன்னும் பாடம் கற்காமல், அவரது சுயநலத்திற்காக கட்சியை அழித்து வருகிறார்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.சென்னை எழும்பூரில், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' கூட்டம் நேற்று நடந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை, 10 நாட்களில் முடிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்து, 42 மாதங்களாகியும் முடிக்காமல் இருக்கும் தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பன்னீர்செல்வம் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட என்னை தோற்கடிக்க, ஆறு பன்னீர்செல்வங்களை நிறுத்தினர். இவற்றையெல்லாம் கடந்து வந்தோம். அங்கு, 10.5 லட்சம் ஓட்டுகள் பதிவான நிலையில், எங்கள் போராட்டம் நியாயமானது என மக்கள் புரிந்து, 3.42 லட்சம் ஓட்டுகளை எனக்கு அளித்தனர்.ஆனால், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்து, 13 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற தேனியில், 'டிபாசிட்' கூட கிடைக்கவில்லை. இவ்வளவு நடந்தும், பழனிசாமி பாடம் கற்கவில்லை. தன் சுயநலத்திற்காக கட்சியை அழித்து வருகிறார்.ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தால், அடுத்த தேர்தலில் உறுதியாக வெற்றி பெறும் என்ற நிலை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கட்சிக்கு இருந்தது. இந்த இயக்கத்தை யாராலும் வெற்றிபெற முடியாத அளவுக்கு, அவர்கள் வளர்த்தனர்.கடந்த 1989 வரை, அ.தி.மு.க.,வில் உறுப்பினராகக்கூட இல்லாமல் இருந்தவர் பழனிசாமி. அவர் பேசுவது அனைத்தும் பொய். நான் என்ன தவறு செய்தேன் என்ற கேள்விக்கு, அவரிடம் எந்த பதிலும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆத்மா கட்சியை வழிநடத்தி வருகிறது. தொண்டர்களுக்கான கட்சியை, தொண்டர்கள் தான் வழிநடத்த வேண்டும் என, தொடர்ந்து குரல் கொடுப்பேன்.அறிவில்லாமல் ஏதாவது செய்துவிட்டு, பின்வாங்குவதை தான் பழனிசாமி செய்து வருகிறார். பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., வேண்டும் என, தொண்டர்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பழனிசாமியின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கி விட்டது.ஜனவரி மாதம் அனைத்து மாவட்டங்களுக்கும், அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழுவின் தலைமை குழு சுற்றுப்பயணம் செல்லும். அதற்குள் பொறுப்பாளர்களை நியமித்து விடுங்கள். நம் அடுத்த மாநாடு, மதுரை, கோவையில் நடத்தப்படும். கடைசியாக, சென்னையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:கட்சியின் பொதுச்செயலரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்; அந்த விதியை திருத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. தொண்டர்களின் உரிமையை அவர்களுக்கே வழங்க வேண்டும்.அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட நினைக்கின்றனர். இலங்கையைக் காப்பாற்றினோம் எனக்கூறிய ராஜபக்சே குடும்பம், தற்போது ஊரில் நடமாட முடியவில்லை. 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம் பேசுகையில், ''வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அ.தி.மு.க., ஒன்றாக இணைந்து, 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ''ஒன்றுபடவில்லை என்றால், எவ்வளவு பணம் இருந்தாலும், அரசியல் அநாதையாக நிற்க நேரிடும். யாரும் கவலைப்பட வேண்டாம். கஷ்டப்பட்டவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bhaskaran
டிச 08, 2024 17:08

கட்சியை ஒழிக்க திமுக தேவையில்லை இவனுங்களே போதும்


Narasimhan
டிச 08, 2024 14:43

அம்மா மறைவுக்கு பின் அதிமுக அஸ்தமனமாகிவிட்டது. திமுக பலமடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். உங்களுக்குள் ஒற்றுமையின்மையை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தை பார்த்து வோட்டு போடுபவர்கள் கூட மறந்து விடுவார்கள். இனிமேல் அதிமுக சரித்திரம்தான்


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 14:14

பழனிசாமி பாடம் கற்கவில்லையா? உங்களுக்கும் உங்களின் ஆளுங்களுக்கும் சூப்பர் பாடம் கற்பித்து விட்டார். இன்னும் புரியவில்லையா? பலாப்பழம் தூக்க வெச்சுட்டார். இன்னும் புரியலைன்னா எப்படி??


வைகுண்டேஸ்வரன்
டிச 08, 2024 13:58

குருமூர்த்தி கிட்ட மீண்டும் போய் கேளுங்க. இன்னும் அசிங்கமா திட்டுவாரு, வாங்கிண்டு வாங்க.


Sampath Kumar
டிச 08, 2024 12:01

சாங்கி கட்சியுடன் இணைய வில்லை என்ற கோவம் உங்களுக்கு அவருக்கு கொடநாடு கேடுபிடியில் நீக்க ஒன்னும் செய்ய இல்லை என்ற கோவம் ஆக ஆளுக்கு ஒரு இல்லையே பிச்சு வைத்து கொண்டு தண்டை விட்டுவைக்காங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:25

நீங்களாவது தாய்க் கழகத்துடன் இணைத்துவிடுங்கள் ....


Nanban
டிச 08, 2024 09:08

பல கட்சி பண்ருட்டியின் ஆலோசனையை கேட்டால் கட்சி இணையாது .


Kasimani Baskaran
டிச 08, 2024 07:48

பங்காளிகளிடம் சரணடைந்து தாய்க்கழகத்துடன் இணைத்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் அவர் பன்னீர் சொல்வதையெல்லாம் கேட்கமாட்டார்.


S.L.Narasimman
டிச 08, 2024 07:44

ஆள் இல்லாத கடையிலே டீ ஆத்துற மாதிரி இருக்கு கோமாளிகள் மீட்டீங்.


raja
டிச 08, 2024 06:27

நீ அந்த கேடுகெட்ட இழி பிறவி ஒன்கொள் கொள்ளை கூட கோவால் புற திருடனிடம் சேராமல் இருந்திருந்தால் இன்று அதிமுக வே உன்னுடையதாய் இருந்திருக்கும்... கொள்ளை அடித்த சொத்தை காப்பாற்ற பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு விருந்து உண்டு சிறப்பித்ததால் தொண்டர்கள் உன்னை ஒதுக்கி விட்டார்கள் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை