உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆரை., கூட பழனிசாமி நீக்குவார் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., விமர்சனம்

எம்.ஜி.ஆரை., கூட பழனிசாமி நீக்குவார் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., விமர்சனம்

புதுடில்லி:''அ.தி.மு.க., விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது தவறு என கூறினால், கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர்.,ஐ கூட பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்,'' என, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், அக்கட்சியின் பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் அளிக்கப்பட்டிருக்கும் புகார் மனுக்கள் மீது டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் நடத்திய விசாரணையில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், பன்னீர்செல்வம் தரப்பில் மனுதாரர் சூரியமூர்த்தியும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, ராம்குமார் ஆதித்யன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தேர்தல் கமிஷனில், நேற்று ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். பின், கே.சி.பழனிசாமி அளித்த பேட்டி: ஜெயலலிதா இறந்தபோது, அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து, பின் கட்சியில் இருந்து யாரெல்லாம் நீக்கப்பட்டனரோ, அவர்கள் மாற்றுக் கட்சியில் சேராமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் அனைவரையும் மீண்டும் அக்கட்சியில் சேர்க்க வேண்டும். அதன்பின் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலை நடத்தி, பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.அதுவரை, தற்போது அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தி உள்ளேன். தற்போதைய சூழலில், அ.தி.மு.க., விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது தவறு என கூறினால், கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர்.,ஐ கூட பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை