மேலும் செய்திகள்
யாருடன் கூட்டணி; ஜெயக்குமார் சொல்வதை கேளுங்க!
11-Nov-2024
சென்னை: முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணி, வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறுவது, அக்கட்சியின் தன்னம்பிக்கையையும், கூட்டணி பலத்தையும் காட்டுகிறது.இந்த கூட்டணியை எதிர்த்து, வலுவாக போட்டியிடக் கூடிய எந்த அணியும் இதுவரை தெரியவில்லை. எதிர்காலத்தில், எதிர்க்கட்சிகள் இடையே, இதுபோன்ற ஒரு கூட்டணி அமையுமா என்பதை பொறுத்து தான் ஆட்சி மாற்றம் நிகழும்.அ.தி.மு.க.,வை வழிநடத்துவோர், தங்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். எனவே, ஒற்றுமை தேவையில்லை என்கின்றனர். நோயே இல்லாதவனுக்கு மருந்து எதற்கு? வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சாதிக்கும் என, நான் நம்பவில்லை. த.வெ.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைக்க கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால், முதல்வர் என்பதில் சிக்கல் உள்ளது.பழனிசாமி, விஜயை முதல்வராக ஏற்க மாட்டார்; அதே நேரம், பழனிசாமி முதல்வராக விஜய் கட்சி துவங்கவில்லை.வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சொன்னதால் தான், பா.ஜ., கூட்டணியில் இருந்து பழனிசாமி வெளியேறினார். அப்படி இருக்கும்போது விஜயை மட்டும் எப்படி ஏற்பார்? இவ்வாறு அவர் கூறினார்.
11-Nov-2024