பழனிசாமி கணக்கு சரியாக வரும் வேலுமணி பேச்சு
சென்னை:''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல பழனிசாமி போடும் கணக்கும் சரியாக வரும்,'' என, அ.தி.மு.க., கொறடா வேலுமணி கூறினார்.தமிழக சட்டசபையில் நடந்த விவாதம்: * அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு: கணக்கு கேட்டதால், எம்.ஜி.ஆர்., கட்சியை ஆரம்பித்தார். அவரது வழியில், 2026ல் முடிக்க வேண்டிய கணக்கை, பழனிசாமி தலைமையில் துவங்குவோம். * அமைச்சர் தங்கம் தென்னரசு: கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள்; இப்போது தப்பு கணக்கு போடுகின்றனர். * அ.தி.மு.க., - வேலுமணி: எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் போட்ட கணக்கு போல பழனிசாமி போடும் கணக்கும் சரியாகத்தான் இருக்கும். கூட்டி கழித்து பார்த்தால், சரியாக வரும்.இவ்வாறு விவாதம் நடந்தது.