மேலும் செய்திகள்
பிரதமரை விமர்சித்து போஸ்டர்: நடவடிக்கை எடுக்காத போலீஸ்
26 minutes ago
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி
50 minutes ago
கோவை: ''அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்கவே, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி கூட்டணி அமைத்திருக்கிறார்,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி கோரி, திட்ட அறிக்கை சமர்ப்பித்து, 15 மாதமாகி விட்டது. தமிழகத்துக்கு மட்டும் அற்ப காரணங்கள் கூறி, நிராகரித்திருக்கின்றனர். கடந்த 2011 மக்கள் தொகையை சொல்கிறார்கள்; 14 ஆண்டுகள் மக்கள் தொகை வளர்ச்சியை கணக்கில் கொள்ளாமல் குறுகிய மனப்பான்மையோடு செயல்பட்டு இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலங்களில் மெட்ரோவுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் நிராகரிக்கப்பட்டதன் நோக்கம் தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையே காரணம். கடந்த லோக்சபா தேர்தலில், அவர்கள் கணக்கு ஜீரோவாக இருந்தது. இதே கணக்கு சட்டசபை தேர்தலிலும் இருக்கும். இது, அ.தி.மு.க.,வுக்கும் பொருந்தும். அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்கவே பா.ஜ.வுடன் அ.தி.மு.க., பொது செய லாளர் பழனிசாமி கூட்டணி அமைத்திருக்கிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் கோவையில் நேற்று நடந்தது. செந்தில்பாலாஜி பேசுகையில், ''தமிழகத்துக்கு நாங்கள் சிறப்பு திட்டங்கள் தந்திருக்கிறோம். அதனால், மாநிலம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என பா.ஜ., ஒரு திட்டத்தையாவது சொல்ல முடியுமா. பிரதமராக இருந்தாலும் சரி; மத்திய அமைச்சர்களாக இருந்தாலும் சரி, தமிழகத்துக்கு வரும்போது, திருக்குறள் சொல்வார்கள்; தமிழில் பேச ஆரம்பிப்பார்கள். தமிழகத்தை புகழ்ந்து பேசுவதை போல், மாயத்தோற்றத்தை உருவாக்குவார்கள்,'' என்றார். முன்னதாக, ம.தி.மு.க., - காங்., - இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., மூத்த நிர்வாகிகள் பலரும் பேசினர். தி.மு.க., மாணவரணி மாநில செயலாளர் ராஜிவ்காந்தி பேசும்போது, பிரதமரையும், மத்திய நிதியமைச்சரையும் தரம் தாழ்ந்து பேசினார். அதைப்போலவே, செந்தில்பாலாஜியும், பிரதமரை பற்றி பேசும்போது, தரமற்ற வார்த்தைகளை குறிப்பிட்டார்.
26 minutes ago
50 minutes ago