உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நவ.24ல் ஆலோசனை பன்னீர்செல்வம் அறிவிப்பு

 நவ.24ல் ஆலோசனை பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். அவருடனிருந்த முக்கிய நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக, வரும் 24ம் தேதி தனது மாவட்ட செயலர் மற்றும் நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு, சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திருமண மண்டபத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை