உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச ஜவுளி கண்காட்சி கோ - ஆப்டெக்ஸ் பங்கேற்பு

சர்வதேச ஜவுளி கண்காட்சி கோ - ஆப்டெக்ஸ் பங்கேற்பு

சென்னை: துபாயி ல் வரும், 17ம் தேதி நடக்க உள்ள, சர்வதேச ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சியில், தமிழகத்தின் முன்னணி தயாரிப்புகளுடன், கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் பங் கேற்க உள்ளது. இதுகுறித்து, கைத்தறித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சர்வதேச ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி, துபாயில் வரும், 17ம் தேதி, கோலாகலமாக துவங்க உள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, முன்னணி, ஆடை மற்றும் ஜவுளி வடிவமைப்பு நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நாட்டின் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்த உள்ளன. தமிழகத்தில் இருந்து, கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் பங்கேற்க உள்ளது. இதன் வாயிலாக, வெளிநாட்டு சந்தைகளில், தமிழகத்தின் தயாரிப்புகளுக்கு புதிய வாய்ப்பு உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை