உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது இடங்களில் கட்சி கொடிக்கம்பம்; 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

பொது இடங்களில் கட்சி கொடிக்கம்பம்; 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்' என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அ.தி.மு.க.,கொடி கம்பம் நட அனுமதி கோரி, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: * பட்டா நிலத்தில் கொடிக்கம்பங்களை நிறுவலாம். அதற்குரிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.* பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.* தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். * இதையடுத்து, கொடி கம்பம் நட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Oru Indiyan
ஜன 28, 2025 01:01

செம்ம காமெடி நீதிபதி.. தமிழ்நாட்டில் உள்ள கொடி கம்பங்கள் பல கோடி இருக்கும். அதை எடுக்கணுமா.. இது என்னமோ நட்சத்திரங்களின் எண்ணிக்கை சொல்ல வேண்டும் என்பது போல இருக்கு. பார்க்கத்தானே போறோம் இந்த கட்சிகளோட ஆட்டத்தை...


visu
ஜன 27, 2025 22:20

அப்படியே பிள்ளை அப்பாவுக்கு சிலை வைக்க கூடாது அரசு கட்டிடங்களுக்கு உறவினர் பேர் வைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவரலாம் பொது இடங்களில் உள்ள அணைத்து சிலைகளையும் நீக்கலாம்


Nagarajan D
ஜன 27, 2025 21:49

கொடி கம்பங்களுடன் சேர்த்து கண்ட கண்ட அரசியல் வியாதிகள் சிலைகளையும் நீக்க ஒரு உத்தரவு போடலாமே... அப்படி போட்டால் ஒரு விளங்காதவன் வேலூரிலிருந்து வந்து நீ நீதிபதியானது ஈரோட்டு வெங்காயம் ராமசாமி போட்ட பிச்சை என சொல்லுவான் என்று பயமோ?


Ramesh Sargam
ஜன 27, 2025 21:07

கூடவே பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளையும் ராவோடுராவாக அகற்றவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.


V RAMASWAMY
ஜன 27, 2025 20:50

அரசியல்வாதிகளுக்கு இல்லாத அக்கறை நீதிமன்றங்களுக்குத் தான் இருக்கிறது. நீதி மன்றங்களே அரசை நிர்வகித்தால் என்ன? சட்டப்படி முடியாது என்றாலும், மக்கள் விரோத செயல்களை தானாக முன்வந்து உத்தரவிட்டால் நல்லது.


visu
ஜன 27, 2025 22:18

நீதிமன்றங்கள் அதிகாரம் உள்ள அமைப்பு ஆனால் பொறுப்பை கொடுக்க வில்லை . காவல் துறை நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்தால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் தேவையா இல்லையா என்று சரியாய் முடிவெடுப்பார்களில்லையா


Dharmavaan
ஜன 27, 2025 18:34

நீதிபதிகள் யார் விவரம் வேண்டும்


Rengaraj
ஜன 27, 2025 17:19

மை லார்ட் பொது இடங்களில், சாலை ஒர தடுப்புகளில் அரசியல் கட்சிகளின் நோட்டிஸ்களும் தனியார் கம்பெனிகளின் விளம்பரங்களும் சகட்டுமேனிக்கு ஒட்டப்பட்டு கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. இதற்கென்று விதிகள் சட்டத்தில் இருந்தாலும், அவை மீறப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆவன செய்யவேண்டுமாய் அரசுக்கு உத்தரவிடவேண்டும்.


Kumar Kumzi
ஜன 27, 2025 16:29

அப்படியே தமிழ்மொழி விரோதி பெரியான் ஊழல் விஞ்ஞானி கட்டுமரம் போன்ற தமிழன விரோதிகளின் உருவ சிலைகளையும் அழித்தொழிக்க வேண்டும்


KRISHNAN R
ஜன 27, 2025 15:11

கட்சி கொடி கட்டினால் டோல் ஃப்ரீ.. பார்க்கிங் பிரீ.. ஆனா மக்களுக்கு நூற்றி படினொண்ணு


vivek
ஜன 27, 2025 13:02

இரும்பை கண்டுபிடித்தது திமுக....அதனால் அவர்கள் நட்ட கொடி கம்பங்களை முதலில் நீக்க வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை