உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்லவன் பழுது பயணிகள் அவதி

பல்லவன் பழுது பயணிகள் அவதி

காரைக்குடி: காரைக்குடியிலிருந்து நேற்று அதிகாலை 5:45 மணிக்கு சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கிளம்பியது. செட்டிநாடு ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயிலின் கடைசியில் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் பிரேக் பைண்டிங்கில் பழுது ஏற்பட்டது. இதனால், புகை வந்ததால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து ரயில்வே இன்ஜினியர்கள் வந்து பழுதை சரி செய்தனர். ரயில் 50 நிமிடங்கள் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை