உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோல்வியுற்ற திட்டத்துக்கு கட்டணம்; சங்கடத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள்

தோல்வியுற்ற திட்டத்துக்கு கட்டணம்; சங்கடத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள்

திருப்பூர்; உள்ளாட்சிகளில் செயல்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு, மக்களிடம் இருந்து சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுவது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலில் உள்ளது. அதன்படி, உள்ளாட்சி துாய்மைப் பணியாளர்கள், வீடு, வீடாக சென்று, குப்பை சேகரிப்பது, அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து உரம், மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிக்காக, உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், பொதுமக்களிடம் இருந்து மாதந்தோறும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால், 90 சதவீத உள்ளாட்சி நிர்வாகங்களில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படாத திட்டமாகவே இருக்கிறது. வீடுகளில் இருந்து குப்பை சேகரிக்கும் பணி மட்டுமே நடக்கிறது; மாறாக, அவற்றை கொட்டுவதற்கு கூட பெரும்பாலான ஊராட்சிகளில் இடமில்லை; அவை தரம் பிரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்படுவதும் இல்லை.இதுபோன்ற சூழலில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கென சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவது ஏற்புடையதல்ல என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது, உள்ளாட்சி நிர்வாகத்தினர் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gajageswari
ஜூலை 17, 2025 06:30

திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் வ.வாவிபாளையம் தூய்மை கிராம் பரிசு வாங்கி. எங்கு பார்த்தாலும் நெகிழி காகிதம்


Padmasridharan
ஜூலை 16, 2025 05:52

உண்மைதான் சாமி. இவங்களோட வேலையே பொருட்கள பிரிச்ச, வித்து பணமாக்கறதுதான். வீட்ல இருக்கிற பொருட்களை வண்டியில ஏத்தி அப்புறப்படுத்தறதுக்கு மாமூல் பணமும் வாங்கறாங்க. யாராவது வீட்ல வேலை கொடுத்தா அதையும் செஞ்சி பணமாக்குறாங்க.


புதிய வீடியோ