உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: இ.பி.எஸ்., கண்டனம்

அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி: இ.பி.எஸ்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எங்கள் ஆட்சியில் விவசாயிகள் பாசனத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினோம். தற்போது விவசாயத்திற்கு கையாலாகாத திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்காமல் முறை வைத்து வழங்கப்படுகிறது. பல நேரங்களில் 'லோ வோல்டேஜ்' மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின் மோட்டார்கள் பழுதடைந்து மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது கண்முன்னே பயிர்கள் கருகுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
மே 07, 2024 07:48

அறிவிச்சுட்டு வெட்டினால் மக்கள் சந்தோஷப் படுவாங்களாக்கும்.


A1Suresh
மே 06, 2024 19:37

ஐயா மீண்டும் தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் உள்ளன ஏன் பதறுகின்றீர்கள் ஓய்வெடுங்கள்


சுலைமான்
மே 06, 2024 17:35

முதலில் ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக செயல் படுங்க.


குமரி குருவி
மே 06, 2024 17:12

அறிவிக்கப்படாத மின்வெட்டு தான் திராவிட மாடல்


அப்புசாமி
மே 06, 2024 16:11

அறிவிக்கப்படாத மழை வெட்டுக்கு யாருக்கு கண்டனம் தெரிவிக்க போறீங்க?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ