உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது: முருகன்

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது: முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது, மக்களை திசை திருப்பும் செயல். ஹிந்தி மாதம் என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது வாடிக்கை. தி.மு.க., - காங்., கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், ஹிந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக, தி.மு.க.,வினர் இருந்த துறைகளிலும் அதை முழுமையாக கடைபிடித்தனர். தமிழ் மொழியை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல திருவள்ளுவருக்கு கலாசார மையம் ஏற்படுத்தி இருக்கிறோம். இப்படித்தான் தமிழ் மொழியை உலக அளவில் போற்றுதலுக்குரிய மொழியாக ஆக்கி இருக்கிறோம். சென்னை துார்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த ஹிந்தி மாத நிறைவு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, திராவிட நல் திருநாடு என்ற வாக்கியம் விடுபட்டுள்ளது. அந்தத் தவறு யார் செய்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தவறுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்கும்போது, அந்த செயலுக்கு கவர்னரை தொடர்புபடுத்துவது நியாயமான விஷயம் இல்லை. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில், கவர்னர் சிறப்பு விருந்தினராகவே கலந்து கொண்டார். அப்படி இருக்கும்போது, அவரை எப்படி நடந்த சிறு தவறுக்கு பொறுப்பாக்க முடியும்?தமிழகத்தின் சமீபத்திய மழை வெள்ளத்தை, தி.மு.க., அரசு சரியாக கையாளவில்லை. அதை திசை திருப்பும் நோக்கிலேயே, தூர்தர்ஷனில் நடந்த ஒரு விவகாரத்தை அரசியலாக்குகின்றனர். இது 1967ம் ஆண்டு கிடையாது. தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நாம் யாரும் ஹிந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது; அதேசமயம் எதிர்ப்பாளர்களும் கிடையாது. தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என சொல்லி விட்டு ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பரா? அதற்கு அவர்கள் முன் வர மாட்டார்கள். அவர்களுக்கு, அதில் வருமானம் கிடைக்கிறது. மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது; அது எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

venugopal s
அக் 20, 2024 20:23

குஜராத்காரரும், பீகார்காரரும் தமிழை வைத்து அரசியல் செய்வதை சொல்கிறாரோ?


Sivagiri
அக் 20, 2024 13:22

கரெக்டு. ஏன்னா , இவரு தமிழன் அல்ல - தமிழ் தெரிந்த , தெலுங்கர் - - ஆகவே இவரும் , திராவிடன் என்று சொல்லிக்கலாம் , , ,


Ramesh Sargam
அக் 20, 2024 13:05

போலி வாக்குறுதிகளை கொடுத்தும் மக்களை ஏமாற்றக்கூடாது என்றும் கூறுகிறீர்கள். பிறகு அவர்கள் எப்படித்தான் மக்களை ஏமாற்றவேண்டும், எப்படித்தான் மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும், தொடரவேண்டும்?


venugopal s
அக் 20, 2024 12:04

இனிமேல் மதத்தை வைத்து மட்டுமே ஏமாற்ற முடியும் என்கிறாரா?


raja
அக் 20, 2024 13:07

என்ன உடன் பிறப்பே நமது சின்ன தலைவரின் சனாதன ஒழிப்போம் கோயில்களை இடிப்போம் மாற்று மதத்தினரின் ஓட்டுகளை பெருவோம் என்ற மாத அரசியல் ரகசியங்களை இப்படி போட்டு உடைத்து விட்டாய்..


T.sthivinayagam
அக் 20, 2024 12:02

தாய் மொழிபற்றும் தேச பற்றும் ஒன்றுதான் தங்களுக்கு என்று தாய் மொழி இல்லாதவர்களே சுய நலனுக்காக மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர்


raja
அக் 20, 2024 13:03

சரியா சொன்ன நமது முதல்வரின் தாய் மொழி தெலுங்கு... அதை மறைத்து வேறொரு தமிழ் மொழியின் மேல் பற்றாக இருப்பது போல் நடித்து தேசத்துக்கு ஊரு விளைவிக்கும் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக தமிழகத்தை மாற்றி தேச பட்ரும் இல்லாமல் இருக்கிறார் தனது சுயநல பதவி ஆசைக்காக என்று வருத்த படுகிராய் ...தமிழனுக்கு விடியல் வரும் என்று ஏமாந்து விட்டோமே என்று கவலை படுகிராயா உடன் பிறப்பே...


xyzabc
அக் 20, 2024 11:29

வெட்டி விஷயங்களை அரசியல் செய்வதில் திராவிட அரசுடன் போட்டி போட முடியாது.


sing venky
அக் 20, 2024 11:08

உங்கள் தாய் மொழி என்ன என்று முதலில் சொல்லிவிட்டு பிறகு கருத்து சொல்லுங்கள் தமிழ் நாட்டு பாஜாகாவில் உங்களை விட்டால் வேறு யாருக்கும் இணையமைச்சர் ஆகும் தகுதி இல்லையா?


raja
அக் 20, 2024 13:13

உடன் பிறப்பே தமிழன் கடவுள் ஆன முருகனின் பெயர் வைத்து இருக்காரே அப்போதே தெரிய வில்லை இவர் தமிழன் இவரின் தாய் மொழி தமிழ் என்று... இவேர் என்ன நமது திராவிட தலைவர் தெலுங்கர் போலவா அவர் குடும்பத்தில் ஒருவருக்காவது தமிழில் பெயர் வைத்து இருகார்களா...கருணா ஸ்டாலின், உதய் இன்பா இவை எல்லாம் தமிழ் பெயரா அது போகட்டும் தொழில் நிறுவனங்களின் பெயர்கள் ஆன சன், ஆதித்யா, கே ஆகிய டிவி பெயர்கள் தமிழா என்று கேட்க உனக்கு தெம்பு இருக்கிறதா...


Oviya Vijay
அக் 20, 2024 10:44

தேர்தல் களத்தில் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்படும் பிஜேபி உறுப்பினர்கள் மற்ற மாநில MLA க்களின் தயவால் ராஜ்ய சபா பதவியைப் பெற்று அல்லது மத்திய அரசின் கடைக்கண் பார்வையால் ஆளுநர் பதவியைப் பெற்று உங்கள் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்களே தவிர மற்றபடி தமிழகத்தின் மீது ஒரு அக்கறை புண்ணாக்கும் கிடையாது... என்றைக்கும் மக்கள் அங்கீகாரம் முக்கியம்... அதற்கு நீயெல்லாம் ஒரு வேஸ்ட் முருகா... பிஜேபி எனும் மதவாத கட்சிகளுக்கு என்றைக்குமே தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கப் போவதில்லை... தமிழகம் என்றைக்கும் சங்கிகளின் கூடாரம் ஆகாது. உட்கட்சி பூசலாலேயே தமிழகத்தில் பிஜேபி தன் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் இழக்கும்...


raja
அக் 20, 2024 13:21

முஸ்லீம் லீக் ஜவாஹிருல்லா, பேராயர் எஸ்றா கட்சிகள் எல்லாம் மத வாத கட்சி யில்லையா உடன் பிறப்பே...அது நமது திமுகவுடன் தானே கூட்டணி வைத்துள்ளது.... சரி ஒரு தாழ்த்த பட்டவருக்கு எம்பியே இல்லை என்றாலும் மந்திரி பதவி கொடுத்து அழகு பார்க்கிறார்கள்... ஆனால் நமது தலைவரோ தன் மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அலு பார் கிரார் யேன் உன்னை போல் காலம் காலமாய் கலகத்துக்காக உயிரையே கொடுக்கும் ஒரு உடன் பிறப்பு கூட இல்லையா அந்த பதவி வகிக்க.. யேன் என்று உன்னால் என்னால் கூட கேட்க முடிய வில்லையே...நமக்கு வாய்த்த ருவா 200 கே இவ்வளவையும் மறைத்து முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறோம்....


SRIRAMA ANU
அக் 20, 2024 10:00

ஆமாம் நாங்கள் கடவுளை வைத்து காலங்காலமாக ஏமாற்றுவோம்.....


RAMAKRISHNAN NATESAN
அக் 20, 2024 09:58

விடியலின் பெயரே தமிழ்ல இல்லப்பு... அவரது தோப்பனாரின் பூர்விகப்பெயர் கூட தமிழ்ல இல்ல ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை