உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதயாத்திரைக்கு பதில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பாதயாத்திரைக்கு பதில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சட்டசபை தொகுதி வாரியாக, 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர், 200வது தொகுதியாக, சென்னை துறைமுகத்தில் யாத்திரை மேற்கொள்ள இருந்தார்; போலீஸ் அனுமதி தரவில்லை. எனவே, அந்த தொகுதிக்கு உட்பட்ட தங்கசாலையில் இம்மாதம் 11ம் தேதி இரவு பொதுக்கூட்டம் நடந்தது. பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அண்ணாமலை ஆகியோர், திறந்தவெளி வேனில் ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். சென்னையில் யாத்திரைக்கு போலீசார் அனுமதி தராததால், சட்டசபை தொகுதிகளில் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை அண்ணாமலை நடத்த உள்ளார். இன்று (பிப்., 13) தண்டையார்பேட்டை அருகில்,பா.ஜ.,வின் வடசென்னை லோக்சபா தொகுதி தேர்தல் அலுவலகத்தை அண்ணாமலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அவர், அந்த பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.இதேபோல, மற்ற தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அண்ணாமலை நடத்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

K.Ramakrishnan
பிப் 13, 2024 18:39

மக்களை சந்தித்தாலும் சரி... மலை ஏறினாலும் சரி.. காவடி தூக்கினாலும் சரி.. உருண்டாலும் சரி.. புரண்டாலும் சரி.. புனித நீராடினாலும் சரி.. கடலாடினாலும் சரி.. கரை சேரப் போவதில்லை... முதலில் ஆணவத்தை விட்டொழித்து மற்றவர்களையும் மனிதர்களாக மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மைக் பிடித்ததுமே குறை சொல்வதையே வழக்கமாக்கிக்கொண்டவர், முதலில் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். யாரோ ஒருவரிடம் மாதம் ரூ.8லட்சம் சும்மா வாங்கி செலவழிக்கிறவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும். எளிமை என்ன என்பதை சின்னதுரை எம்.எல்.ஏ.விடம் பாடம் கற்று அதன்பிறகு பேச வாருங்கள். இந்த அரசியல் உலகில்யாரும் யோக்கியமானவர்கள் அல்ல. யோக்கியனாக இருந்தால் ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டார். இதை புரிந்தவர்கள் மக்கள். புரியாதவர் அண்ணாமலை.


திகழ்ஓவியன்
பிப் 13, 2024 19:38

அருமை சார்


Apposthalan samlin
பிப் 13, 2024 17:18

கருணாநிதிக்கு கூட்டம் கூடும் வோட் போடமாட்டான் பேச்சை கேட்க வருவான் அது போல் கூட்டம் வந்தால் வோட் விழும் என்கிறது தப்பு வேடிக்கை பார்க்க தான் மக்கள் வருவார்கள்.


Bala
பிப் 13, 2024 15:01

வேண்டுமென்றே அனுமதி மறுக்கப்பட்டது


தமிழ்
பிப் 13, 2024 12:19

மத்த இடங்கள்ல மட்டும் என்ன பாதயாத்திரையாகவா போனாரு. எல்லா இடத்துக்கும் திறந்த வேனில்தான் வந்தாரு.


Veeraraghavan Jagannathan
பிப் 13, 2024 13:29

ராகுல் காந்தி மட்டும் என்ன வாழுதாம்? அவரும் வண்டில தான் போறாரு.


venugopal s
பிப் 13, 2024 11:23

அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணி அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும், ரொம்ப ஆடக்கூடாது!


Sridhar
பிப் 13, 2024 11:58

ஏன், பயமா இருக்குதா கொமாரு?


Subramanian N
பிப் 13, 2024 12:08

யார் ஆடுறாங்க உங்க ட்ராவிடிய அடிமைகள்தான் ஆடுறாங்க


Nagendran,Erode
பிப் 13, 2024 13:30

அறிவாலய வாட்ச்மேன் எல்லாம் அண்ணாமலைக்கு புத்திமதி சொல்லுது.????


duruvasar
பிப் 13, 2024 11:11

செந்தில், சீப்பை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடியிருக்கிறார் போலும். உண்மையிலேயே கோபால் பயந்துட்டான்.


ராஜா
பிப் 13, 2024 09:51

மக்கள் சந்திப்பு பாத யாத்திரையை விட அதிக பலன் கொடுக்கலாம்.


RAMAMOORTHI S
பிப் 13, 2024 09:36

எதிர்ப்பு இருக்கும்போதுதான் வளர்ச்சி வேகமாக இருக்கும். . கருணாநிதி அவர்கள் ஜெயலலிதாவை எதிர்க்க ஆரம்பிச்சவுடன்தான் ஜெயலலிதாவின் வளர்ச்சி அதிகமானது. இக்கருத்தை முரசொலி மாறன் அவர்களே கூறியிருக்கிறார். .


அப்புசாமி
பிப் 13, 2024 08:01

வாகனத்தில் ஊர்வலமாக பாதயாத்திரை சென்றனர். கால் வலிச்சுரும்.


ராஜா
பிப் 13, 2024 09:50

நன்றி! ராகுல் காந்தியை இங்கு நினைவு படுத்தியதற்கு.


rajasekaran
பிப் 13, 2024 10:10

அனுமதி தராதலால் தான் வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். உங்களை மாதிரி அரை மணி நேரத்தில் உண்ணா விரதம் முடிஞ்சுடுச்சி என்று சொல்லுவது கிடையாது,


hari
பிப் 13, 2024 10:22

200 ரூபா தந்தா நடந்து வருவியா கோவாலு


Narayanan Muthu
பிப் 13, 2024 08:00

ஜோக்கரை தலைவனாய் நியமித்தால் சர்க்கஸ்தான் செய்வான் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.


Sivasakthi
பிப் 13, 2024 09:22

பரவாயில்லையே, உதவாநிதியைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறோம்.


guna sekar
பிப் 13, 2024 09:56

நம்ம தலைவரை விடவா


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை