உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்புவனம்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர்ஐ, விஏஓ கையெழுத்துடன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ' உங்களுடன் ஸ்டாலின் 'திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர் ஐ, வி.ஏ.ஓ., கையெழுத்துடன் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=89bpa6wg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பட்டா மாறுதல், பெயர் மாற்றம், ஸ்மார்ட் கார்டு வேண்டி வழங்கப்பட்ட மனுக்கள் ஆகியவை அதில் உள்ளன. திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரையில் ஆகஸ்ட் 21, 22ம் தேதிகளில் பெறப்பட்ட மனுக்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து விரைந்த சென்ற அதிகாரிகள் ஆற்றுப்பாலத்தின் கீழ் தண்ணீரில் கிடந்த மனுக்களை கைப்பற்றி கொண்டு சென்றனர்.மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வைகை ஆற்றில் கொட்டிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி உள்ளது. 'இதற்கு தான் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வரிசையில் காத்திருந்து மனுக்களை அளிக்கின்றனரா' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மனுக்களை ஆற்றில் வீசிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Joe Rathinam
ஆக 30, 2025 10:48

அடுத்த மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் கட்சியின் மக்கள் வரிப்பணத்தில் கட்சிக்கு இலவச விளம்பரம் தனது கட்சிக்கு ஆதரவு பெறுவதற்கு. இது ஒரு உண்மையான அரசு பணியாக இருக்கும் பட்சத்தில் வளம்பரமே தேவையில்லை.


Balaji
ஆக 30, 2025 08:31

படிக்க தெரியாதவங்க, பணத்த சுருட்ட பதவில இருக்காங்க. இது வரைக்கும் பல இடங்கள் மனுக்கள் தூக்கி வீசப்பட்டன. ஆனா, அதே மனு கொடுத்தவன், தேர்தல் நேரத்தில, விலை போகிறான்.


surya krishna
ஆக 29, 2025 23:28

2021 தேர்தலுக்கு முன்பு கிராம மக்களுடன் நடத்திய கூட்டத்தில் கிடைத்த மனுக்களை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை எரித்தார்களா புதைத்தார்களா தெரியவில்லை ஆனால் சாவி மட்டும் மு.க ஸ்டாலின் பாக்கெட்டில் இருந்தது. இது எல்லாம் தேர்தல் வரும்போது திமுக நடத்தும் கண்ணாமூச்சி நாடகம் மக்கள் இவர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம் நம்பவும் கூடாது. திருடர்கள் முன்னேற்ற கழகம் அதுதான் திமுக....


ஆரூர் ரங்
ஆக 29, 2025 22:14

எப்போ இவ்வளவு மனுக்களையும் படித்தார்.


Athinarayanan s
ஆக 29, 2025 21:16

ஒரு சந்தேகம். போலீஸ் இதை விசாரிக்க சட்டபூர்வமாக முகாந்திரம் இருக்கிறதா? யாராவது புகார் கொடுத்து அதன்மீது விசாரணையாக இருக்குமோ?


anbu
ஆக 30, 2025 00:33

நாடகம் முடிந்தது. இனி எதற்கு. அப்புறம் அடுத்த நாடகம் போடுவோம்.


theruvasagan
ஆக 29, 2025 21:15

ஏற்கனவே 99.999 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேத்தியாச்சு. அப்புறம் குறையோ பிரச்சனையோ இருக்க வாய்ப்பே இல்லை. ஆத்துல கிடந்தது எல்லாம் உண்மையான புகார்களாக இருக்க வாய்ப்பில்லை. அப்பழுக்கில்லா விடியல் ஆட்சியை களங்கப்படுத்த எதிர்கட்சிகளின் சதி வேலையை தவிர வேற எதுவும் இல்லை.


Natchimuthu Chithiraisamy
ஆக 29, 2025 20:41

ஆற்றிலாவது போடுங்கள் புண்ணியம் கிடைக்கும் தயவு செய்து குப்பையில் போட்டு என் மானத்தை வாங்கி விடாதீர்கள் என்று அரசு அதிகாரிகள் கனவில் கூறியதாக இருக்கலாம்.


பேசும் தமிழன்
ஆக 29, 2025 19:35

5 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த மனுக்கள் என்ன ஆனது என்றே இன்னும் தெரியவில்லை.


அன்பு
ஆக 30, 2025 00:37

திவசம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன


ramakrishna rajan
ஆக 29, 2025 19:19

உடனே டிஸ்மிஸ் செய்யவும்


Selva mariappan
ஆக 29, 2025 19:16

இதில் அதிர்ச்சி ஏதுமில்லை. ஸ்டாலின் மனு எல்லாம் பாக்கமாட்டார்.. ட்ராமா போடுவார். அவருக்கு எதுவும் தெரியாது.. 13 வருஷம் வேலை பார்த்த கால்நடை மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பி சந்தோசப்பட்டவர்..வாய் சவடால். எல்லாரையும் பணி நிரந்தரம் னு சொல்லிட்டு... காசு இருந்த வேலை நடக்கும் மாடல் ஆட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை