மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா மனு
09-Oct-2025
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ், சி.பி.ஐ., விசாரணை கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூரில், த.வெ.க., தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்நிலையில், நெரிசலில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளார். அதில், 'கரூர் சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளார். ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. - டில்லி சிறப்பு நிருபர் -
09-Oct-2025