உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்கக்கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் ஆவணங்களை வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. கடந்த 2012 முதல் 2022 வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வங்கிகளில் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை வழங்கக்கோரியும், செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் பணம் டிபாசிட் செய்தவர்களின் பான்கார்டு விவரங்களை தெரிவிக்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று, செந்தில்பாலாஜியின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தொடர்ந்த மனு மீது வரும் 19ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறியுள்ளது.

காவல் நீட்டிப்பு

இதனிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ள செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல், வரும் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி காவல் நீட்டிக்கப்படுவது இது 39 வது முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தங்கராசு
ஜூன் 15, 2024 12:37

இத்தனை நாள கண்டுபிடிக்க முடியாதவங்க இனிமேலா கிழிக்கப்.போறாங்க? சீக்கிரமே விடுதலை ஆயிடுவார். அமைச்சரும் ஆயிடுவாரு.


ராமகிருஷ்ணன்
ஜூன் 15, 2024 02:48

ஒரு வேளை பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கியதை திருப்பி கொடுத்தால் ஜாமீன் கிடைக்குமோ., பரிகாரமாக கரூர் கேங் முயற்சி செய்து பாருங்கள்.


R.MURALIKRISHNAN
ஜூன் 14, 2024 22:40

40ல் ஜெயிச்சும் ஒண்னும் பண்ண முடியல, 40 ல் தோத்தும் ஒண்ணும் பண்ண முடியல. கடவுள் இருக்கின்றார் கண்ணுக்கு தெரிகின்றதா


R.MURALIKRISHNAN
ஜூன் 14, 2024 22:37

அடுத்த முறை தள்ளுபடி பண்ணினா திமுக இதுலயும் 40 முறை பண்ணிட்டாங்கப்பா


Ramarajpd
ஜூன் 14, 2024 21:54

சேராத இடம் சேர்ந்து ??


rama adhavan
ஜூன் 14, 2024 20:45

செந்தில் பாலாஜி விரைவில் "பெயில் செஞ்சுரி பாலாஜி" ஆவாரோ?


Ramesh Sargam
ஜூன் 14, 2024 20:22

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. இந்த செந்தில்பாலாஜி சிறைக்கு சென்று ஒரு வருடம் ஆகிறது. அவரை ஒருமுறையாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று சந்தித்து ஆறுதல் கூறி இருப்பாரா...?


தாமரை மலர்கிறது
ஜூன் 14, 2024 20:05

இன்னும் நூறுவருடங்கள் சிறையில் வாழ வாழ்த்துக்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 14, 2024 19:28

வங்கி ஊழியர்கள் விவரம் எதற்கு? வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி மகிழ்விக்கவா?


Duruvesan
ஜூன் 14, 2024 18:07

விடியல் சார் போட்ட கேஸ் என்னமா வேலை செய்யுது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ