உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீச்சு; ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீச்சு; ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசி மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒருவரை அரிவாளால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் இரவு 11.30 மணியளவில் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், மைதீன் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மர்ம நபர்கள் வீட்டின் கதவை அரிவாளால் கொத்தியும், பெட்ரோல் குண்டை வீசியும் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதேபோல், வேலைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிய மசூது என்பவரை அரிவாளால் தாக்கி உள்ளனர். தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார்? அவர்கள் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sankare Eswar
டிச 18, 2024 13:20

வீடியோ மூஞ்சி ஆட்சியில் இதுவும் நடக்கும்.. இந்நனமும் நடக்கும். சட்டம் ஒழுங்கு சாந்தி சிரிக்கிறது,


kumarkv
டிச 18, 2024 12:32

Drug smuggling or Hawala transaction will be the basis of attack


S.kausalya
டிச 18, 2024 12:12

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தினம் தினம் ஒரு சம்பவம்.


Barakat Ali
டிச 18, 2024 11:39

நமது செயல்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன .......


sridhar
டிச 18, 2024 11:26

ஐயையோ , உடனே ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஏதாவது பரபரப்பு கிளப்பி திசைதிருப்ப வேண்டுமே . அவசரம்.


Arasu
டிச 18, 2024 11:12

திருந்தாத நெல்லை மக்கள்.....சாதி வெறியன்கள் ....ஹரியட் சட்டம் தான் சரி பட்டு வரும்


ஆரூர் ரங்
டிச 18, 2024 10:49

குறை கூற கொம்பன்கள் வரட்டும்.


Ramanujadasan
டிச 18, 2024 10:02

தமிழகத்தில் விடியல் ஆட்சியில், மக்களுக்கு படையல் தான் நடக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை