உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரண்டாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை

இரண்டாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2வது நாளாக அணை நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியாகும். அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும் போது, அணை நிரம்பியதாக அறிவித்து, அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். நேற்று முன்தினம் (ஜூலை 15) பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், அணைக்கு வினாடிக்கு, 18,120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதனால் நேற்று அதிகாலை பில்லூர் அணை, 97 அடியை எட்டியதை அடுத்து அணை நிரம்பியது. நேற்று இரவும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதனால் அணைக்கு அதிகபட்சமாக, வினாடிக்கு, 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஏற்கனவே அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வருகின்ற தண்ணீரை அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது. அதோடு பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Dr N K Chandrasekaran
ஜூலை 18, 2024 05:37

என்ன நிரம்பிவழிந்தாலும் கோவை விமானநிலை வளாகத்தை ஒட்டி உள்ள குடியிருப்புகளுக்கு 8 நாட்களுக்கு ஒருமுறைதான், இப்பொழுமும் வெறும்1500 லிட்டர் குடிநீர்தான் வருகிறது. என்ன கணக்கு, எப்படி அறவீடி செய்து நீர் விடுகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். பில்லூர் அணையில் 50%ற்கு மேல் தூர் உள்ளது. தூர் எடுக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்தன. அதைத் துரிதப்படுத்தவேண்டும். இல்லை எனில் மார்ச் மாதம் நீர் இருக்காது. குடிநீர் வினியோகம் கண் காணிப்பு சரி இல்லை. கோவை கார்ப்பரேஷன் கமிஷனர் கவனிப்பாரா?


vijay, kovai
ஜூலை 18, 2024 00:12

திராவிட கழகங்கள் வெள்ள நீரை சேமிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை


swa mu
ஜூலை 17, 2024 19:25

தெளிவான செய்திகள், செய்தி வாசிப்பு தொழில் நுட்பம் அருமை...தினமலருக்கு பாராட்டுக்கள்


கோபாலன்
ஜூலை 17, 2024 13:21

கடந்த சில மாதங்களாகவே மண் கலந்த தண்ணீர் தான் விநியோகம் செய்யப்படுகிறது.இனி கேட்கவே வேண்டாம். தண்ணீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும்


Rajah
ஜூலை 17, 2024 11:04

அண்டை மாநிலங்களில் கையேந்தாமல் நம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு எதாவது ஓர் வழி இருக்கின்றதா? இதையிட்டு எந்த அரசாவது ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்களா?


Muguntharajan
ஜூலை 17, 2024 09:36

இவ்வளவு சீக்கிரமாக அணை நிரம்பியதை பார்த்தால் அணையில் பாதியளவு சேற்று மண் இருக்கும். ஆகையால் அணையை தூர்வார வேண்டும். இதனால் அதிக நீரை சேமிக்க முடியும். கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு குடிநீர் வழங்க இது மிகவும் அவசியம். இது குறித்து உங்கள் நாளிதழில் செய்தி வெளியிட வேண்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி