உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு

பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்; புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை(ஏப்.,6) ராமேஸ்வரம், பாம்பன் வருகிறார். மதியம் 12:00 முதல் 2:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுகின்றனர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தையும் துவக்குகிறார். இதற்காக இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாளை காலை 11:50 மணிக்கு வந்திறங்குகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wnvuqviq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின் காரில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். ராமநவமியான நாளை ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்கிறார்.பின் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கும் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகிறார். நிகழ்ச்சிகள் மதியம் 2:30 மணிக்கு முடிந்ததும் மண்டபத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 4000 போலீசார் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் எதிர்வரும் 6.4.2025 அன்று வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். தன் பின் வழக்கம் போல் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் பிரதமர் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோவிலுக்குள் தரிசனம் மற்றும் தீர்த்தம் நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் மற்றும் தீர்த்தம் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ஆரூர் ரங்
ஏப் 05, 2025 16:28

ராஜிவ் படுகொலைக்குப் பின் பிரதம மந்திரி, ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் ராஜிவ் கொலை செய்யப்பட்ட மாநிலத்தில் இன்னும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படலாம்.


Mediagoons
ஏப் 05, 2025 14:32

தமிழரகள் ஏமாளிகள் அல்ல .


Mediagoons
ஏப் 05, 2025 14:31

தேர்தல் ஜுரம், பயம் . இந்துமதவாத வேடத்தால் மறைக்கும் முயற்சி . தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி பலிக்காது


Mediagoons
ஏப் 05, 2025 14:22

ஒரு தனிமனிதனுக்காக ஒட்டுமொத்த கோவில் நகரமும் முடக்கம்.


SUBRAMANIAN P
ஏப் 05, 2025 14:21

பூர்வஜென்மத்தை பத்தியெல்லாம் பேசுது 200 ஊவா உ பி


venugopal s
ஏப் 05, 2025 12:50

நானூறு பேர் வரும் நிகழ்ச்சிக்கு நாலாயிரம் போலீசாரா? வெட்டிச் செலவு!


vivek
ஏப் 05, 2025 13:41

இந்த கருத்து போட உனக்கு 200 ரூபாய் ரொம்ப.அதிகம்


M. PALANIAPPAN, KERALA
ஏப் 05, 2025 12:40

முதல் நாள் தாய்லாந்து, மறுநாள் இலங்கை நாளை ராமேஸ்வரம் , 75 வயதிலும் அசராமல் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் மோடிஜி பல்லாண்டு காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்


T.sthivinayagam
ஏப் 05, 2025 10:38

வருகைக்கு வாழ்த்துக்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும் விரைவில் திறந்து வைக்க வேண்டும்


V Venkatachalam
ஏப் 05, 2025 20:43

நீ அவ்வளவு பெரிய நோயாளியா? அடடா, காவேரி ஆஸ்பத்திரியில் போய் உடம்பை பாத்துக்கோ..அஞ்சு கட்சி அமாவாசை செ.பா வுக்கு அங்க வச்சு தான் நல்ல சிகிச்சை குடுத்தாங்க.. மனுஷன் இப்ப நல்லா இருக்கான்..


Narayanan
ஏப் 05, 2025 10:09

மகாத்மா காந்தி சொன்னார் என்று பெண்கள் நகை அணிந்து நாடு இரவில் 12 மணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நடந்து செல்கிறாளோ அன்றுதான் சுதந்திர இந்தியாஎன்று. நம் அரசியல் வாதிகள் தனியாக என்று செல்கிறார்களோ அந்த நாளே சுதந்திர நாள். ஒரு வருக்கு 4000 போலீஸ் அதற்கான மக்கள் வரி பண சிலவு இதை கருத்தில் கொண்டு இனி யாரும் வெளியில் வரவேண்டாம் . எல்லாம் காணொளிவாயிலாகவே திறந்துவிடலாம் .


sankaranarayanan
ஏப் 05, 2025 10:02

விடியாத விடியல் அரசு இராமேஸ்வரம் தனுஷ்கோடி உயர்மட்ட சாலை அமைக்க மத்த்கிய அரசு சாலை 400-கோடி பணம் ஒதுக்கியும் அதை மாநில அரசு கண்டுகொள்ளவே இல்லை மேலும் இந்த அமைப்பிற்கு நிலம் அபகரித்து வழங்கவும் இன்னமும் மாநில அரசு முன்வரவில்லை இதற்கு அவர்கள் இந்த சாலை அவசியம் இல்லை என்றே கருதுவதால்தான் எப்போது இந்த சாலை அமையுமோ ராமருக்குத்தான் தெரியும்


Ray
ஏப் 05, 2025 12:24

தனுஷ்கோடி வரை செல்ல தேசீய நெடுஞ்சாலை எண் 87 உள்ளது. சரியான பராமரிப்புதான் இல்லை. மத்திய அரசு பாராமுகம். விடியல் அரசு அது பற்றி கோரிக்கை வைத்தால் சுத்தம் ஏற்கனவே ஏதாவது செய்வதாக உத்தேசம் இருந்திருந்தாலும் நிறுத்தப் பட்டுவிடும். ஒன்றிய ஆட்சியாளர்கள் அந்தளவுக்கு அல்ப புத்திக்காரர்களாயிருப்பது இந்த நாட்டின் துர்பாக்கியமே என்ன செய்வது. இது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமென்பார்கள்.


புதிய வீடியோ