உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியின் தமிழ் பேச்சு: திராவிட கட்சிகளுக்கு தூக்கம் போச்சு?

பிரதமர் மோடியின் தமிழ் பேச்சு: திராவிட கட்சிகளுக்கு தூக்கம் போச்சு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியின் தமிழ் மற்றும் தமிழர் பற்றிய பேச்சு, திராவிட கட்சியினருக்கு தூக்கத்தை தொலைக்க வைத்துள்ளது.தமிழ் மொழி, தமிழர், தமிழகம் என்றாலே நாங்கள் மட்டும்தான் என்று மொத்த குத்தகைக்கு எடுத்தது போல் திராவிட தலைவர்கள் எப்போதும் பேசுவது வழக்கம்.தமிழ் பற்றியும் தமிழர் பற்றியும் வேறு யாரையும் பேசவும் விட மாட்டார்கள். ஆனால் அவர்களின் எண்ணத்தை பிரதமர் மோடி புண்ணாக்கிவிட்டார். திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழாவில் மோடி பேசிய பேச்சு, பாஜ., வுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. நேற்று அந்த விழாவில் பேசிய மோடி எடுத்த எடுப்பிலேயே 'வணக்கம்... தமிழ் குடும்பங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்' என்று பேச்சை ஆரம்பித்தார். அதைக் கேட்டு அங்கு கூடியிருந்த கூட்டம் ஆரவாரம் செய்தது. மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் லேசாக சிரித்துக்கொண்டார். ஆரம்பத்திலேயே கூட்டத்தை தன் வயப்படுத்துவார் மோடி என்று முதல்வர் எதிர்பார்க்கவில்லை. அதோடு விட்டாரா பிரதமர், பேச்சுக்குப் பேச்சு அடிக்கடி, 'என் குடும்ப உறவுகளே, சொந்தங்களே, எனது தமிழ் குடும்பமே' என்று தெறிக்க விட்டார். 'இது நமது பாணியாச்சே; பிரதமர் இப்படி நமது ஆயுதத்தை கையில் எடுத்து விட்டாரே. தமிழை சொல்லித்தானே ஓட்டு வாங்குகிறோம். அதற்கும் இந்த மனிதர் ஆப்பு வைத்து விட்டாரே' என்ற அதிர்ச்சியில் அங்கு கூடியிருந்த திமுகவினர் ஆணி அடித்தது போல் அமர்ந்திருந்தனர்.'தமிழ் உங்களுக்கு மட்டுமா சொந்தம் எங்களுக்கும் அது சொந்தம் தானே' என்று மோடி சொல்லாமல் சொல்லியது, திராவிட கொள்கையாளர்களை கிள்ளாமல் கிள்ளியது. முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதியின் ஸ்டைல் அங்கு பரிதாபமாக சிதறியது.'தமிழ், தமிழர் என்று பேசினால் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம்' என்ற எளிய பார்முலா, அங்கு ஈசியாக கடைவிரிக்கப்பட்டது. தமிழின் ஹோல்சேல் வியாபாரிகள் அங்கு சில்லரை வியாபாரிகளாக சிதறிப் போனார்கள். மாற்றுக் கட்சியினரோ 'நாங்களும் உங்களைப் போல் பேசுவோம்ல' என சிலிர்த்துப் போனார்கள்.அதுமட்டுமா, மாணவர்களிடம் பேசிய மோடி 'எனது மாணவக் குடும்பமே' என்று தமிழில் அடிக்கடி குறிப்பிட்டு திராவிட கட்சிகளின் அடிவயிற்றில் நெருப்பை வைத்தார்.மோடியின் இந்த ஸ்டைலுக்கு மாணவர்கள் கரகோஷம் செய்தனர். இந்த கரகோஷம் சில திராவிட தலைவர்களின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது.முன்பெல்லாம் தமிழ் பற்றி பலமுறை மோடி பேசியிருந்தாலும் இம்முறை அவர் தமிழர்கள், தமிழ் குடும்பங்கள் என பேச்சுக்கு பேச்சு குறிப்பிட்டு தன்னையும் தமிழர்களில் ஒருவராக காட்டிக் கொண்டார். இது மோடியின் முந்தைய பேச்சிலிருந்து நிறைய மாறுபட்டது. மோடியின் இந்த புதிய அணுகுமுறை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று திராவிட கட்சிகளை புலம்ப வைத்தது. இந்த தாக்கம் இருக்குமா என வரும் தேர்தலில் தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Balasubramanian
ஜன 04, 2024 05:38

என்ன தமிழோ? கடைசியில் ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் என்று கொடுத்து மாடல் குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டு வந்து விட மாட்டார்களா? ( 37 ஆயிரம் கோடிக்கு கடன் மனு போட்டு இரண்டு கோடிக்கு கார் வாங்கியாகி விட்டது) ????


Kasimani Baskaran
ஜன 04, 2024 05:31

மோடி தமிழ் படிக்க முயல்வது போல தெரிகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 'திராவிடம் கலந்த' தமிழர்களை விட சிறப்பாகவே பேச வாய்ப்பிருக்கிறது. பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது.


கருத்து சுந்தரம்
ஜன 04, 2024 04:55

ஆக....தமிழை வளர்க்க தமிழரல்லாத வெளிமாநிலத்தவர் தான் வரணும்னு தலையெழுத்து ????‍♂️


ரமேஷ் VPT
ஜன 04, 2024 03:34

இப்படி மோடி வந்து இப்படி ஆப்பு வைப்பார் என்று இந்த (தி)ருட்டு (மு)ன்னற்ற (க)ழகத்தினர் எதிர்பார்த்தேத்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொன்னதும் அரங்கத்தில் பலத்த ஆட்சேபனை எழுந்தது, அதிலேயே முதல்வரின் முகத்தில் ஒரு அரை விழுந்தது போலிருந்தது. தமிழ், தமிழன், திராவிடம் என்று மக்களை ஏமாற்றியது இனிமேல் நடக்காது.


Chakkaravarthi Sk
ஜன 04, 2024 02:39

இந்த நாள் வரை தமிழ்நாட்டில் தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழி பேசியவர்கள் தானே ஆட்சி செய்திருக்கிரார்கள்?? ஏன் திராவிட முன்னேற்றம்?? என்ன காரணத்தால் தமிழ் முன்னேற்றம் என்று வாயில் வார்த்தையே வரவில்லை?? தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் தானே தமிழ் தமிழ் என் உயிர் மூச்சு என்றார்கள். படிப்பவருக்கு சந்தேகம் என்றால் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள், அளவுக்கு அதிகமாக தமிழ் பற்றி பேசுபவர்கள் யார் என்றும் அவர் பிறந்த இடமோ அல்லது குடும்பத்தில் பேசப்படும் தாய்மொழி என்னவென்று ஆராய்ந்து பின்னர் ஆத்திரபடலாமே.


Ramesh Sargam
ஜன 04, 2024 00:04

ஆஹா... பாரத பிரதமர் தமிழ் மொழியில், ஒரு துண்டு சீட்டு உதவி இல்லாமல் பேசுகிறார். ஆனால், வெட்கக்கேடு, தமிழக முதல்வரோ துண்டு சீட்டு உதவியுடன் பேசுகிறார். வெட்கம். வேதனை.


r ravichandran
ஜன 03, 2024 22:58

துண்டு சீட்டு பார்க்காமல் ஒரு திருக்குறள் சொல்ல முடியுமா?


K.Ramakrishnan
ஜன 03, 2024 22:05

தூக்கமும் போகலை... நிம்மதியும் பறிபோகலை... தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ் ரொம்ப பிடிக்கும் என்பார். இன்னைக்கு கேரளாவில் போய், மலையாள தாய்மார்களே... மலையாள சகோதரிகளே... என்கிறார். இந்தியாவின் சுதந்திரம், கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பை வடிவமைத்ததே கேரளாவின் மகள்கள் தான் என்கிறார்.. இதெல்லாம் ஊருக்கு ஒரு பேச்சு. வந்தே பாரத் ரயில்கள் விடுவதும், நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுகளை அள்ளும் யுக்தியே...


karupanasamy
ஜன 04, 2024 03:52

ஊபீஸாகிய உங்களுடைய அழுகுரல் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது.


sankaranarayanan
ஜன 03, 2024 21:03

ஓங்கோல் மன்னர் கன்னட பெரியோர்கள் தமிழகத்தில் ஆட்டம்போடும்போது ஏன் குஜராத் பிரதமர் தமிழில் பேசக்கூடாது


Seshan Thirumaliruncholai
ஜன 03, 2024 20:24

உடன்பிறப்புகளே இனிமேல் கூறமுடியாது. இது குடும்ப ஆட்சியை பற்றியது. மோடியின் பேச்சு தி மு க வை சிந்திக்க வைத்துள்ளது. உடன்பிறப்புகள் என்பதற்கு மாற்றம் காணவேண்டிய நிலைக்கு தி மு க தள்ளப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி