உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு

சென்னை; காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டைமானின் துணிச்சலும்,ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே என்று பாமக தலைவர் அன்புமணி பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை;https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1r6ntbyr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேபாளத்தில் தலைவிரித்தாடிய ஆட்சியாளர்களுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் போராட்டத்தின் போது, தலைநகர் காத்மாண்டுவில் தீயிட்டு எரிக்கப்பட்ட நட்சத்திர விடுதியில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 5 பேரை, அதே விடுதியில் தங்கியிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண முன்னாள் கவர்னர் செந்தில் தொண்டைமான் காப்பாற்றியதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது துணிச்சலான செயலை நானும் பாராட்டுகிறேன்.காத்மண்டு கலவரத்தில் எரிந்து கொண்டிருக்கும் விடுதியில் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றுவது மிகவும் ஆபத்தானது என தெரிந்தும், விடுதி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியர்களைக் காப்பாற்றி வெளிக்கொண்டு வந்த செந்தில் தொண்டைமானின் துணிச்சலும், ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே. அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sundarsvpr
செப் 17, 2025 13:27

கலவரத்தில் இந்தியர்கள் தாக்கப்பட்டார்கள் என்றால் காத்மாண்டின்உள் நாட்டு விவகாரம் இதனால் மத்திய அரசு ஒன்றும் செய்திடவில்லை என்பதனை பற்றி அன்புமணி எதுவும் கூறவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். தொண்டைமானை பாரத தேச மக்கள் பாராட்டுகிறார்கள்


pakalavan
செப் 17, 2025 12:16

சின்ன மாங்கா பெரிய மாங்கா, சந்திச்சாலே பொட்டிதாம்பா


முக்கிய வீடியோ