உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்  

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்  

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பா. ம.க., தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் துவங்கியுள்ள நிலையில், அக்கட்சி நிறுவனரான ராமதாஸ் கிராமம்தோறும் செல்ல திட்டமிட்டு, இதற்கான அறிவிப்பை வெ ளியிட இருந்தார். இந்நிலையில், நேற்று இரவு ஏற்ப ட்ட திடீர் உடல் குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ராமதாஸ் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதய பரிசோதனைகள் செய்வதற்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
அக் 06, 2025 09:55

மருத்துவர் ராமதாஸ் அவரது இதயம் பலவீனமாகி இருந்தால், அதற்கு மருத்துவர் அன்புமணி அவர்களே காரணம்.


VENKATASUBRAMANIAN
அக் 06, 2025 08:39

இந்த வயதில் ஓய்வு தேவை. ஆனால் இவர் செய்வது. விரைவில் குணமடைந்து வர வேண்டும். கட்சியை மகனிடம் கொடுத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். எதற்காக இந்த போராட்டம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை