வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவர்களிடம் காட்டுங்க உங்க பவரை...முடியாது... மடப்புரம் அஜீத்திடம் தான் காட்ட முடியும்...
இவன் அய்யா வா மகனா?
நிச்சயம் மனிதன் இல்லை
சென்னை: குடியிருப்புவாசிகளுக்கு இடையேயான பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீஸ் பாலாஜியை பாமக வழக்கறிஞர் வெங்கடேஷ் கடுமையாக தாக்கி உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.சென்னை நொளம்பூர் காவல் நிலையம் எதிரே ஜெய் பாரத் அப்பார்ட்மென்ட் அமைந்துள்ளது. அதன் குடியிருப்போர் நல சங்க தலைவராக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளார். இவருடன் அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர்கள் யாராவது பிரச்னை செய்தால் அவர்கள் வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் சப்ளையை கட் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக வெங்கடேசன் மீது நொளம்பூர் போலீசில் வழக்கு பதிவாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=spkaclxz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நேற்று இரவு அதே அப்பார்ட்மென்ட் வளாகத்தில் வசிக்கும் சரவணன் என்பவர் வீட்டிற்கு வரும் தண்ணீரையும் வெங்கடேசன் தடை செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸ் பாலாஜி நேரில் விசாரிக்க சென்றார்.அப்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமக வழக்கறிஞர் வெங்கடேசன் சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான பரபரப்பு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பேசும் பொருளாகியுள்ளது. பணியில் இருந்த போலீசை தாக்குவது குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இவர்களிடம் காட்டுங்க உங்க பவரை...முடியாது... மடப்புரம் அஜீத்திடம் தான் காட்ட முடியும்...
இவன் அய்யா வா மகனா?
நிச்சயம் மனிதன் இல்லை