உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பிரதமரின் ரோட் ஷோ: 20 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

சென்னையில் பிரதமரின் ரோட் ஷோ: 20 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நாளை (ஏப்.,9) பிரதமர் மோடி பங்கேற்கும் 'ரோடு ஷோ'வுக்கு போலீசார் 20 நிபந்தனைகளை விதித்து அனுமதித்துள்ளனர்.தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதன் ஒருபகுதியாக சென்னை தி.நகரில் நாளை பிரதமர் மோடியின் வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்க இருக்கிறது. இதனால் தி.நகர் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க சென்னை போலீஸ் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த 'ரோடு ஷோ'வுக்கு சென்னை போலீஸ் 20 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

நிபந்தனைகள்

* பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது* வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது* பிரதமரின் ரோடு ஷோவின்போது உரையாற்றவும் அனுமதியில்லை* மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பக் கூடாது* குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும்* பேனர், கட் அவுட்கள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது* அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ரோடு ஷோ நடத்த வேண்டும்; வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது* தோல் பை, தண்ணீர் பாட்டில் போன்ற எளிதில் தூக்கி எறியக்கூடிய வகையிலான பொருட்கள் எடுத்து வரக்கூடாது* மரத்தால் ஆன கைப்படியிடன் கூடிய பதாகைகள் எடுத்து வரக்கூடாது* அலங்கார வளைவுகள் அமைக்க கூடாது.உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நிபந்தனைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Easwar Kamal
ஏப் 09, 2024 17:35

முக்கியமானதே விட்டு பள்ளி குழந்தைகளை பிராசாரத்துக்கு பயன் படுத்தக்கூடாது


Anantharaman Srinivasan
ஏப் 08, 2024 22:57

நாளை மோடியை காண தானகவே சேர்ந்த கூட்டத்தை ஊடகங்களில் காணப்போகிறோம் நாயினார் நகேந்திரன் கலந்து கொள்ள தடையாமே


Ambikapathy Muniaraj
ஏப் 09, 2024 09:31

தமிழ் மக்கள் வரவேற்ப்பார்கள் எப்படி என்றல் MrNATTA ஜி, Mr ராஜ்நாத்சிங்ஜி க்கு கொடுத்த வரவேற்பு போல மிக , மிக , அற்புதமாக இருக்கும், யாரும் தமிழ் மக்களை எமாற்ற mudiyathu


venugopal s
ஏப் 08, 2024 21:38

பாஜகவினர் ஆணவத்தில் ஆடித்தானே பழக்கம்,சட்டத்தை மதித்ததாக வரலாறு இல்லையே!


Ambikapathy Muniaraj
ஏப் 09, 2024 09:25

இது உண்மை


Jagan (Proud Sangi)
ஏப் 08, 2024 19:07

தேர்தல் சமயத்தில் பிரதமர் தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிறார் இந்திய எதிரிகளுக்கு இவ்வள்வு நோட்டீஸ் குடுத்து செய்வது தேவையில்லாதது ஜாக்கிரதையா இருக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஏப் 08, 2024 18:54

திருட்டு திராவிட மாடல் ஆட்களுக்கு தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் ...இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.


Anantharaman Srinivasan
ஏப் 08, 2024 22:46

குஜராத்தியை நம்பி நீதான் ஏமாறபோறே


பேசும் தமிழன்
ஏப் 08, 2024 18:52

திமுக மற்றும் அதன் அல்லக்கை கட்சிகளின் ஊர்வலம் என்றால் இப்படி தான் கட்டுப்பாடு விதிப்பீர்களா


Natarajan Ramanathan
ஏப் 08, 2024 17:14

நேற்று காஞ்சியில் போலீசை பார்த்து அவ்வளவு கோபமா


Natarajan Ramanathan
ஏப் 08, 2024 17:11

ராவுல் வின்சி வரும்போது பத்துபேர்கூட வரமாட்டார்கள் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது


ஆரூர் ரங்
ஏப் 08, 2024 16:52

நோட்டாவுக்கும் கீழுள்ளகட்சி ன்னு கிண்டலாகக் கூறிவிட்டு இவ்வளவு பயம் ஏன்? பகுதியின் இரண்டு எம்பி க்களுமே உருப்படாத ஆட்கள் கவுன்சிலர்கள் குடிநீரில் சாக்கடை நீர் கலப்புப் புகாருக்குக் கூட கத்தை கத்தையாக எதிர்பார்ப்பவர்கள் ஊர்வலப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் பிஜெபி க்கு பேராதரவு தருவார்கள்


Kumar Kumzi
ஏப் 08, 2024 16:46

இது திருட்டு திராவிட கட்சி லோக்சபா தேர்தலுக்கு பின் ஆட்டம் ஆரம்பிக்கும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ