உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய சம்பவம்; காங்., எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய சம்பவம்; காங்., எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை அப்புறப்படுத்த கோரிய போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணா சாலை ஐஓபி வங்கி எதிரே உள்ள 'ஹீரோ' ஷோரூம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக 'டொயோட்டா பார்ச்சூனர்' என்ற சொகுசு கார் நேற்று மதியம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை கவனித்த போக்குவரத்து போலீஸ்காரர் பிரபாகரன்,35, காரை அங்கிருந்து அகற்றுமாறு, ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அப்போது, அதில் இருந்த காரின் உரிமையாளரான மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 'சாலையில் நின்று பிச்சை தானே எடுக்கிறீர்கள்' என, போலீசாரை வசை பாடியுள்ளார்.மேலும், அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பிரபாகரனை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து வேறு காரில் புறப்பட்டு சென்றார். கடமையை செய்த போலீஸ்காரர் மீது, பட்டப்பகலில் காங்கிரஸ் எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், போக்குவரத்து போலீசாரை தாக்கிய சம்பவத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Krishna
அக் 19, 2025 22:20

Only IlichaVaaiyan Congress Will be Booked But Goonda Allies


rama adhavan
அக் 19, 2025 20:26

நமக்கு குறுக்கு வழியில் சலுகைகள் பெற வேண்டும் என்ற தவறான எண்ணத்துடன் அரசியல்வாதியின் பின் அலைகிறோமே, அங்குதான் அரசியல்வாதி என்னும் விஷசெடியை உரமிட்டு வளர்க்கிறோம். மேலைநாடுகளில் இப்படியில்லை.


Jey a
அக் 19, 2025 20:09

மறுபடியும் இந்த ஆளுக்கே வாக்களிப்பார்கள் இந்த மக்கள் ,


Varadarajan Nagarajan
அக் 19, 2025 19:10

பணியை செய்த அந்த காவலர் வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப்படலாம்.


rama adhavan
அக் 19, 2025 19:02

உடன் சபாநாயகருக்கு சொல்லிவிட்டு கைது செய்ய வேண்டியதுதானே? ஆளும் கட்சி ஆதரவு என்பதால் வெறும் வழக்கு மட்டுமா? எம் எல் ஏ கோர்ட்டில் கேஸ் வர மாமாங்கம் ஆகுமே?


M S RAGHUNATHAN
அக் 19, 2025 19:01

இதே சாமான்ய ஆசாமியாய் இருந்தால் கைது செய்து ரிமாண்ட் செய்து இருப்பார்கள். ஏன் அந்த MLA வை கைது செய்யவில்லை. ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர் ஹெல்மெட் போடாமல் வந்தால், அவர் போலீஸாரை எதிர்த்து கேள்வி கேட்டால் அடிக்கிறார்களே அந்த துணிவு ஏன்.MLA விடம் காண்பிக்க வில்லை. ஸ்டாலின் அந்த MLA வை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பாரா ?


Govi
அக் 19, 2025 18:28

இவர் எல்லாம் வழக்கி விழமாட்டார். ஏழைகள் தான் வழுக்கி விழுவார்கள் இந்த நாட்டில் ஆளுக்கு தகுந்தாற்போல் சட்டம் வளையும்


வாய்மையே வெல்லும்
அக் 19, 2025 18:24

என்னிக்கு அரசியல்வாதிஆட்சிபீடத்தில் ஆள ஆரம்பித்தவுடன் தெனாவட்டாக சுற்றுகிறாரோ அவருக்கு ஏழரை வந்துவிட்டது என்பது நிச்சயம். இன்னிக்கு இருக்கிற யுகத்தில் தப்புசெஞ்ச உடனே கேமரா பதிவு செய்ய வாய்ப்பு அதிகம். வால் ஆட்டினால் உடனே உங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவிட ரொம்பநேரம் பிடிக்காது. என்னமோ பெரிய அப்பாடக்கர் என பிசாத்து அரசியல் வாதிகளுக்கு நினைப்பு. உங்களை எல்லாம் வெக்கிற இடத்தில வெச்சி அழகுபார்க்கணும் ..


புதிய வீடியோ