உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொன்னதை செய்யாத முதல்வர் ஸ்டாலின்; பதவி உயர்வு பாதிப்பதாக போலீசார் குமுறல்

சொன்னதை செய்யாத முதல்வர் ஸ்டாலின்; பதவி உயர்வு பாதிப்பதாக போலீசார் குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழியை கூட நிறைவேற்றாமல், முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக, போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேரும் ஒருவர், எவ்வித தண்டனையும் பெறாமல், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், அவருக்கு முதலாம் நிலை காவலர் என, பதவி உயர்வு வழங்கப்படுகிறது.அவர், 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், தலைமை காவலர் என்றும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், சிறப்பு எஸ்.ஐ., என்றும், பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆண்டு வரம்பை குறைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போலீசார் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு மற்றும் டி.ஜி.பி.,க்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.இந்நிலையில், சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி வரம்பில், இரண்டு ஆண்டுகளை குறைத்து இருப்பதாக கூறியுள்ளார்.

போலீசார் கூறியதாவது:

கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'இரண்டாம் நிலை காவலராக பணியில் சேருபவர்கள், ஏழு ஆண்டுகள் பணி நிறைவு செய்து இருந்தால் போதும்; முதல் நிலை காவலராக பதவி உயர்வு அளிக்கப்படும். அவர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால், தலைமை காவலராகவும், 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்து இருந்தால், சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வும் வழங்கப்படும்' என, அறிவித்து இருந்தனர்.ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளான போதிலும், இரண்டாம் நிலை காவலர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் முதல் நிலை காவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் என்பதில், எந்த மாற்றமும் செய்யவில்லை. இவர்கள், 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்து இருந்தால் தான், தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற நிலையை மாற்றி, அவர்கள், 13 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தாலே போதும் என, இரண்டு ஆண்டுகளை மட்டுமே குறைத்துள்ளனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை கூட நிறைவேற்றாமல், காவல் துறை மானியக் கோரிக்கையில், முதல்வர் எங்களை ஏமாற்றி உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

V Venkatachalam
ஏப் 30, 2025 10:36

சிரிப்பு போலீஸ்க்கு இப்ப குழந்தை போலீஸ் ஆயிடுச்சு. சுடாலின் தேர்தல் அறிக்கை என்பது கூன் எடப்பாடிய திருட்டு தீய முக காரனுங்க எடப்பாடிய அப்படி தான் விமர்சிப்பானுங்க பாக்ஷைஏமாத்த கொடுத்தது தானே. அத உண்மை என்று நினைத்து கொண்டால் அதை விட பைத்தியக்கார தனம் வேற எதுவும் இல்லை.


Yes your honor
ஏப் 30, 2025 10:13

அப்படியே திமுகவை தாங்காத தட்டில் வைத்து தங்குனீர்களே, உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். திரு. அண்ணாமலை ஜி அவர்கள் போலீஸ் துறையில் இருந்ததால் போலீசாரின் கஷ்ட நஷ்டங்களை பற்றித் தெளிவாகத் தெரிந்தவர். உங்களுக்கு எவ்வளவோ நல்லது செய்ய விரும்பினார். ஆனால் நீங்கள் தான் அவரை வேறுமாதிரி நினைத்தீர்கள். கடைசியில் அவர் வாயாலேயே தமிழக போலீசார் இனி தூங்கமுடியாது என்று சூளுரைக்குமாறு செய்தது மட்டும் தான் உங்களின் ஒரே சாதனை. இன்னும் சில மாதங்களில் திமுக ஆட்சி இல்லாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இதே பிஜேபியின் வீட்டுவாசலில் நின்று சலியூட் அடிக்கப் போகிறீர்கள். நீங்கள் ஒருதலைசார்ந்து இல்லாமல் இருந்திருந்தால் உங்களுக்கு எவ்வளவோ நன்மைகள் திரு. அண்ணாமலைஜி அவர்கள் மூலம் நடந்திருக்கும். திமுகவிற்கு ஜால்றா அடித்து நீங்கள் தான் அனைத்தையும் கெடுத்துக் கொண்டீர்கள். இன்று? மக்களுக்கும் உங்கள் மீது இருந்த மரியாதையும் போய்விட்டது, நம்பிக்கையும் போய்விட்டது. அனுபவியுங்கள்.


பாமரன்
ஏப் 30, 2025 10:02

மக்களிடையே மருவாதியா பேசுவோம்னு சபதம் எடுங்க...


KRISHNAN R
ஏப் 30, 2025 09:45

தொப்பி கொடுத்தார்.. முழு கால்சட்டை கொடுத்தார்.. ஆனா புரொமோஷன்.. கொடுக்க வில்லை


Padmasridharan
ஏப் 30, 2025 08:51

ஏமாற்றி விட்டதாக கூறும் இந்த துறை மக்கள், சின்னக் குழைந்தைகளா ஏமாறுவதற்கு. வாக்குறுதி கொடுத்ததனால்தான் ஓட்டு போட்டோமென்று பள்ளிகூடப் பிள்ளைகளாக சொல்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது எதுவோ அதை செய்யப்போகிறார்கள். இது பதவி உயர்வுக்கோ அல்லது சம்பளம் அதிகமாக பெறுவதற்கோ, எதுவாக இருந்தாலும். கரை படைந்த அரசு காவலர்கள் பலரும் எந்தவித தண்டனையும் பெறாமல்தானே மக்களை அதிகார பிச்சை, லஞ்சம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், குற்றங்களை மறைத்து, பஞ்சாயத்து பண்ணி. இதனால் ஒரு சில நல்ல காவலர்களுக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கியது கணக்கில் எடுக்கணும் இல்லையா.


Svs Yaadum oore
ஏப் 30, 2025 08:41

எவனும் எந்த வேலைக்கும் போக வேண்டாம். மூன்று வேளை சாப்பாடு, அதனுடன் குளிர்ந்த பீர் இலவசமாக தினமும் டோர் டெலிவரி செய்யப்படும் ..அதனுடன் கூடுதல் இலவச இணைப்பாக ஊக்க தொகை தினம் 1000 ரூபாய் ...எல்லோரும் தின்று விட்டு ஏப்பம் விட்டு தூங்கலாம் ....இப்படி தேர்தல் அறிக்கை வெளியிட்டால் முன்னேறிய மாநிலத்தில் வோட்டு வந்து குவிந்து விடும் ...


raja
ஏப் 30, 2025 08:40

உங்களுக்கு மட்டுமா கிவால் புற கொள்ளை கூட்ட குடும்ப ஏவலாலிகளே...நீட்டை விலக்குவிமுண்ணு சொண்ணானுவி அதை நம்பி ஓட்டு போட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி போய் நகையை எல்லாம் வைத்து கடன் வாங்குங்கள் என்று சொன்னதை நம்பிய விவசாயிகள் மாணவர்களின் நகை இப்போ வங்கிகளில் என்று விவசாயிகள், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை என்று சொல்லி ஏமாந்த தலைவிகளும், பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல் படுத்துவோமுன்னு சொன்னதை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்களும் இப்படி பல வாக்குறுதிகளை சொல்லி அதை நிறைவேற்றாததால் தமிழர்கள் அனைவரும் கூடத்தான் குமுறிகிட்டு இருக்காங்க.. போங்க போங்க தேர்தல் நேரத்தில் ஒசி குவார்டரும் கோழி பிரியாணியும் கொடுப்பானுவோ வாங்கி நல்லா வழிச்சு சாப்பிடுங்க...ஆனா ஒன்னு அவனுங்க சொல்லாததையும் செய்வானுவோ.. உதாரணம் சொத்து வரி , குடிநீர் வரி, குப்பை வரி மின்சார கட்டணம் காய்கறியில் இருந்து கட்டிட பொருள்கள் வரை விலையை எத்துவோமுண்ணு சொல்லலை ஆனா செஞ்சாங்கள்ள...


VENKATASUBRAMANIAN
ஏப் 30, 2025 08:19

பொய் என்றால் அது திமுக. சொல்வது ஒன்று செய்வது வேறு. சேகர்பாபு கடந்த விடுமுறை தினங்களில் கோவில்களில் சிறப்பு கட்டணம் இல்லை என்று சட்டசபையில் கூறினார் 18 19 20 தேதிகளில் விடுமுறை. ஆனால் சீரங்கம கோவிலில் ஜக் ஜோராக டிக்கெட் விற்கிறார்கள். அதுமட்டுமல்ல பிளாக்கில் 500 டிக்கெட் விற்கிறார்கள். கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டது. இதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இவர்கள் செய்வதை முன் கூட்டியே சொல்லிவிட்டார்கள்


KRISHNAN R
ஏப் 30, 2025 09:43

அய்யோ அய்யோ... அவங்க சொன்னது,,,, இப்படி இல்லை... அப்படி


S.V.Srinivasan
ஏப் 30, 2025 08:00

ஆஃபீஸ்ர் சார் நீங்களே சொல்லிட்டீங்க. காவல் துறைக்காக அவர் கொடுத்த வாக்குறுதிகள் மற்ற வாக்குறுதிகளை போல் தேர்தல் முடிந்ததும் காற்றோடு காற்றாக கரைந்து விட்டது. அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நம்பியது உங்கள் தவறு.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 30, 2025 07:59

ஆக எல்லோருக்கும் கட்டாயம் விடியல் மூடிட்டு ஓட்டு போட்டு 242 ஜெயிக்க வைப்போம், நமக்கு ரூவா குவாட்டர் பிரியாணி முக்கியம்


புதிய வீடியோ