தடயங்களை திரட்டுவதில் தடுமாறும் காவல் துறை
சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொன்ற வழக்கில், தஷ்வந்துக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால், போதிய சான்று இல்லை என, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஜாமினில் வந்து, தாயை கொன்ற கொடூரன், இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டான் என உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்தது, ஏற்க முடியாத மனவலியை தருகிறது. குற்றங்களையும் தடுக்க முடியவில்லை; குற்றவாளிக்கும் தண்டனையை பெற்றுத்தர முடியவில்லை என்றால், அரசின் மீதும், நீதியமைப்பின் மீதும் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? தமிழக காவல் துறையால், தடயங்களை திரட்டி சான்றுகளை சமர்ப்பிக்க முடியவில்லை. வழக்கில், முழுதுமாக தஷ்வந்தை விடுதலை செய்யும் அளவிற்கு, காவல் துறை மிக மோசமாக செயல்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் குற்றவாளி இல்லை என்றால், சிறுமியை கொன்றது யார்? - சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி