உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு; மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை

கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு; மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.கடந்த மே மாதம், தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில், சென்னை அருகே காட்டாங்கொளத்துாரில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மதுரை ஆதினம் காரில் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, அஜீஸ் நகர் சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை கார் கடந்தபோது, பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x8622b60&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், துாங்கிக்கொண்டிருந்த ஆதினம் எவ்வித காயமும் இன்றி தப்பினார். தன்னை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என, அவர் சந்தேகம் தெரிவித்தார். மதுரை ஆதினம் பொய்யான தகவலை பரப்பியதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, ஆதினத்திற்கு எதிராக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, இன்று (ஜூலை 20) தொடர்பாக, படுத்த படுக்கையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னதாக ஆதினத்திடம் விசாரணை நடத்துவதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரை மடத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் பா.ஜ., வினர் மறித்தனர். மதுரை ஆதினம் விசாரணையின் போது உதவியாளர் தேவை என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த போலீசார், ஆதினத்திடம் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Padmasridharan
ஜூலை 21, 2025 01:40

பொய் சொன்னாரென்று 4 பிரிவுகளில் வழக்கு பதித்தனரா காவல் துறை. அவை என்னென்ன சாமி. அப்ப காவலர்கள் பணம் வசூலிக்க மக்களிடம். நிறைய பொய்கள் அதட்டியும் மிரட்டியும் சொல்லிக்கொண்டு அதிகார பிச்சை எடுக்கின்றனரே அதற்கெல்லாம் இவங்க மேல எத்தனை போடலாம் ஆனால் suspension/ transfer மட்டும்தான் கொடுக்கறாங்க dismiss பண்ணாம


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 19:37

நடந்து ரெண்டு மாசம் கழிச்சு, கேஸை மீண்டும் எடுப்பதால் - பின்னணியில் ஏதோ அழுத்தம் இருந்திருக்கு, அது கவர்னரின் தரப்பிலிருந்தா என்பது தெரியாது - ஆதீனத்தின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமோ ன்னு டவுட்டா கீது ...........


சண்முகம்
ஜூலை 20, 2025 17:47

குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத இந்த காவல் துறைக்கு, ஏதோ விசாரணை நடக்கிறா மாதிரி காண்பிக்கனுமில்லை.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 20, 2025 17:44

இவரை போன்றவர்கள் சைவதர்மத்துக்கு அவமானத்தை தேடித்தருகிறார்கள் .. .....கல்லு மாதிரி இருக்கிறார் ....இவரை போன்றவர்கள் தான் ஹிந்து மதத்தின் நேர் எதிரிகள் ....மதத்தின் பெயரை சீர்கெடுக்கும் கயவன் ........அந்த பேட்டி தந்தபோது இவரோட உடல்மொழி எப்படி இருந்தது ......இப்போது என்னமாதிரி உடல்மொழியுடன் நடந்துகொள்கிறார் என்று பாருங்கள் ....


Kasimani Baskaran
ஜூலை 20, 2025 14:30

மோதிவிட்டு ஓடிய கார் என்றால் யார் என்று கண்டுபிடிக்க முடியாதா? முடிந்ததே - ஆனால் அதுதான் சரியான கார் என்று சொல்லமுடியாத அளவில் இருந்தது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 20, 2025 14:15

சைபர் க்ரைம் போலீசிடம் புகார் அளித்தவர் தகவலையும் வெளியிடுங்களேன் போலீஸ்கார் ? ஒருவேளை வந்தேறி கூட்டமோ ?


montelukast sodium
ஜூலை 20, 2025 13:51

தவளை தன் வாயால் கெடும் அதற்கு இந்த ஆள் உதாரணம்.


V Venkatachalam
ஜூலை 20, 2025 15:09

ஆதீனம் மற்றும் ஆதீனம் சம்பந்தப்பட்ட விஷயம் ன்னா திருட்டு தீய மு.க., உ பீஸ் ங்க கருத்து எழுதுறேன் பேர்வழின்னு மூக்கை முடிந்த மட்டும் உள்ளே நுழைப்பானுங்க. தான் திருடன் அடுத்தவனை திருடன் என்பானுங்க. இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தவன் தீய முக தூண்டுதல் பேரில்தான் வழக்கு போட்டிருக்கிறான். அஜீத் கொலையில் சிரிப்பு போலீஸ் தண்டவாளம் தமிழ் நாடு பூராவும் சந்தி சிரிக்குது. அதப்பத்தி க உ பி எவனும் பேச மாட்டானுங்க.


montelukast sodium
ஜூலை 20, 2025 13:50

இதுவே அம்மா ஆட்சியாக இருந்தால்..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 20, 2025 15:33

பெயர் இல்லாம திரிய மாட்டானுங்க


montelukast sodium
ஜூலை 20, 2025 13:50

ஆஸ்கார் நிச்சயம்


montelukast sodium
ஜூலை 20, 2025 13:49

என்னாமா நடிக்கிறா பாருங்க


Balaa
ஜூலை 20, 2025 15:08

செந்தில் பாலாஜிய விடவா 200...