உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர்நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி எழும்பூர் கோர்ட்டில் சார்லஸ் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.இந்நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Field Marshal
அக் 19, 2025 11:03

மன்னிப்பு கடிதம் கொடுத்து பழகி இருக்கார் ..


ديفيد رافائيل
அக் 19, 2025 10:59

தவறு கண்டுபிடிப்பது அடுத்தவர் பார்க்கும் பார்வை அல்லது கேட்பதை பொறுத்து தான் அமையும்.


ديفيد رافائيل
அக் 19, 2025 10:58

Youtubeல் நான் video பார்த்தேன். அப்படி ஏதும் தவறாக இருப்பதாக தெரியவில்லை. நான் யாருக்கும் support பண்ணவில்லை பொதுவாக சொல்றேன்.


புதிய வீடியோ