உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி வருகைக்கு கோவை காத்திருப்பு; மேடைக்கு தொடரும் போலீஸ் பாதுகாப்பு

உதயநிதி வருகைக்கு கோவை காத்திருப்பு; மேடைக்கு தொடரும் போலீஸ் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை:கோவையில், மார்ச் 23ல் நடத்த திட்டமிட்டிருந்த அரசு விழாக்கள், தமிழக துணை முதல்வர் உதயநிதி வருகை திடீரென ரத்தானதால், ஒத்திவைக்கப்பட்டது. அவரது வருகைக்காக, அதிகாரிகள் காத்திருப்பதோடு, விழா மேடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, கடந்த மாதம் 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி வருவதாக இருந்தது. ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தன. ஆர்.எஸ்.புரம் பள்ளி மைதானத்தில் விழா மேடை, பந்தல் அமைக்கப்பட்டது. பள்ளி நுழைவாயில் அலங்கரிக்கப்பட்டது. சாலைகள் சீரமைக்கப்பட்டன.தி.மு.க.,வினர் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஆர்.எஸ்.புரம் முழுவதும் ரோட்டின் இரு புறமும், தி.மு.க., கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. ஆனால், 22ம் தேதி இரவு, 7:00 மணியளவில், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படும் அறிவிப்பு வெளியானபோது, '30ம் தேதி மீண்டும் விழா நடைபெறும்; மேடையை பிரிக்க வேண்டாம்; போலீஸ் பாதுகாப்பு போட்டு, அங்குள்ள பொருட்களை பாதுகாக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, கடந்த மாதம் 23ம் தேதியில் இருந்து, விழா மேடை அமைந்துள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க தருவிக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பார்த்தபடி, 30ம் தேதியும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால், வாரத்தின் இறுதி நாட்களில் மட்டுமே நிகழ்ச்சி நடத்த வேண்டியுள்ளது.மாவட்ட நிர்வாகத்தில் விசாரித்தபோது, 'வரும், 5 மற்றும் 6ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின், நீலகிரி மாவட்டம் செல்கிறார். 6ம் தேதி திரும்பும் போது, கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அதனால், துணை முதல்வர், 13ம் தேதிதான் வர வாய்ப்பிருக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !