உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட தொகைக்கும் கூடுதலாக நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை என வழங்கப்பட்டுள்ள கடுமையான தண்டனை, குற்றசெயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையான இருக்கும்.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேற்று ( மே 13) தீர்ப்பு வழங்கிய கோவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளது.இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தது மட்டும் அல்லாமல், நீதிமன்ற விசாரணைக் குழு ஒத்துழைப்பு அளித்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.அத்தகைய நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகி ரூ.95 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ஆரூர் ரங்
மே 15, 2025 17:48

அந்தக் காலத்து சார்?.


Anonymous
மே 15, 2025 14:17

வழக்கம் போல் dmk ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்ய கிளம்பியாச்சு....


ஆரூர் ரங்
மே 15, 2025 11:17

அதிமுக அரசு சிபிஐ யிடம் வழக்கை ஒப்படைத்து நியாயத்தை நிலை நாட்டியது. தி.மு.க அரசு ஒரு சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சென்று மூக்குடைப்பு பெற்றது. ஊழல் நேர்மையின்மைக்கு பெயர் பெற்ற சிரிப்பு போலீஸ் துறை இவரிடம்தான் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக சார் தப்பிக்கவிடப்படுவார்.


ஆரூர் ரங்
மே 15, 2025 11:12

இப்போது ஏனோ சிலரது முன்கதை நினைவுக்கு வருகிறது.


தமிழ் மைந்தன்
மே 15, 2025 09:41

யார் அந்த சார்? குடிநீரில் மனித கழிவு கலந்தது, ஈரோடு இரட்டை கொலை, தினந்தோரும் நடக்கும் கொலை, கொள்ளை பாலியல் கொடுமை கள்ள சாரயம் விற்றவருக்கும் உயா்த்தப்பட்ட உதவி தொகை, கஞ்சா கடத்தல் மன்னனுக்கு கட்சி பதவி, இது போல பல திட்டங்கள் தொடருமா?


vbs manian
மே 15, 2025 08:52

குற்றவாளிகளின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து கொடுக்க வேண்டும்.


S.V.Srinivasan
மே 15, 2025 08:38

இப்படி யோசனை இல்லாமல் நிவாரணம் கொடுத்து 2026இல் வீட்டுக்கு போகும் முன் கஜானாவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் பணத்தையும் காலி செய்திட திட்டம். தமிழ் நாடு விளங்கும். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற வழியை பாருய்யா.


rameshkumar natarajan
மே 15, 2025 09:47

Dont worry dear. 2026 also, they will rule tamil nadu. dont have too much of grudge.


Barakat Ali
மே 15, 2025 07:21

பெண்களை அரணாகப் பாதுகாப்பவர் இந்த சார்தான்... அந்த ஒரே காரணத்துக்காக இவரையே மீண்டும் முதல்வராக்க மக்கள் முடிவு செய்யணும் ....


Keshavan.J
மே 15, 2025 08:26

ஹலோ என்ன காமெடி கிமடி பண்றிங்களா. பெண்களுக்கு இவர் அரணா, இந்த ட்ராவிடிய பசங்க 25 லக்ஷத்தில் எவ்வளவு அட்ட போடப்போறாங்களோ.


Thanu Srinivasan
மே 15, 2025 06:58

இதைப்போன்ற முட்டாள்தனம் வேறேதும் இல்லை. நஷ்டஈடு வழங்க என்ன நியாயம் உள்ளது. அந்த பெண்கள் இந்த நிகழ்வால் தங்கள் கன்னித்தன்மையை இழந்துள்ளனர். இந்த நஷ்டஈடு அவர்களின் இழந்த கன்னிதன்மையை ஈடு செய்து விடுமா என்ன? அவர்கள் இந்த பலாத்கார வன்புணர்வால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுருந்தால் அதாவது நிரந்தர உடல் ஊனம், கொடிய வியாதி அல்லது இவர்களை மிரட்டி நகை பணம் போன்ற இழப்புகள் ஏற்பட்டிருந்தால் அப்போது இழப்பீடு வழங்குவது சரியாக இருக்கும் ஆனால் அவ்வாறு நிரந்தர உடல் ஊனமோ நோயோ பொருளாதார இழப்போ ஏற்பட்டதாக கூறப்பட்டவை மில்லை. எவ்வித இழப்புகளும் ஏற்படாத போது ஈடு செய்யும் தேவை எங்கே எழுகிறது


rameshkumar natarajan
மே 15, 2025 09:50

these kind of views should be comdemned toot and nail


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 15, 2025 06:44

திட்டம் 1 இப்படி அறிவித்தனர் மூலம் மக்களிடம் அனுதாபம் பெறுவது திட்டம் 2 நாசகார கும்பல் மேல் முறையீடு செய்யும் போது பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பு சற்று அடக்கி வாசிக்க சொல்லி தண்டனை அளவை குற்றவாளிகளுக்கு குறைத்து கொடுப்பது திட்டம் 3 தண்டனை அளவை குறைத்தவுடன் நாசகார கும்பல் சொத்துக்களை ஆட்டையை போடுவது திட்டம் 4 தண்டனை அளவு குறைக்க பட்டவுடன் சிபிஐ மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்வது திட்டம் 5 மத்திய அரசுக்கு எதிராக உதிரி கட்சிகளை வைத்து போராட்டம் செய்வது திட்டம் 6 சிறிது காலம் சென்றவுடன் கட்டிபுடி வைத்தியம் மூலம் நாசகார கும்பலை வெளியே கொண்டு வந்து அவர்களது குடும்பத்தினருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது. பணத்தாசை காட்டி மயக்கி பார்ப்பதே இந்த அதிகப் படியான நிவாரண தொகை. ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசியல் வாதிகளை ஒரு பொழுதும் யாரும் இது போன்ற இக்கட்டான சூழலில் நம்ப வேண்டாம். அது எந்த கட்சியாக இருந்தாலும். காஷ்மீர் முதல் இலட்சத்தீவு வரையுள்ள எந்த கட்சியானலும். அரசியல் வாதிகளை குடும்ப விஷயங்களில் உள்ளே கொண்டு வராதீர்கள். என்றைக்கும் அது ஆபத்து. துஷ்டனை கண்டால் தூர விலகு. நமது அரசியல் அமைப்பில் நாம் கெட்டதில் எது குறைந்த கெட்டது என்று தான் தேர்வு செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


rameshkumar natarajan
மே 15, 2025 09:54

Ohh.


முக்கிய வீடியோ