உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல், மகர சங்கராந்தி கவர்னர் ரவி வாழ்த்து

பொங்கல், மகர சங்கராந்தி கவர்னர் ரவி வாழ்த்து

சென்னை: பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி ஆகிய பண்டிகைகளுக்கு, கவர்னர் ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இது குறித்து, தமிழக கவர்னர் அலுவலக எக்ஸ் தள பக்கத்தில், கவர்னர் ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தி:பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயன், பவுஷ்பர்வ மற்றும் லோரி ஆகிய விசேஷ தினங்களில், உலகெங்கிலும் உள்ள நம் சகோதர -- சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.நாடு முழுதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நம் வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தில் வாழும் சாட்சியாகும்.மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை, ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன. இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலக ளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை