உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவோடு இரவாக தரமற்ற சாலை அமைப்பு

இரவோடு இரவாக தரமற்ற சாலை அமைப்பு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், தாளிக்கல் கிராமத்திலிருந்து பணவட்டம்பாடி கிராமம் வரை, 3 கி.மீ.,க்கு சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்ட நாட்களுக்கு பின், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நேற்று முன்தினம் இரவு திடீரென சாலை அமைத்தனர்.சாலை அமைத்து ஒரு நாள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், சேதமடைந்து ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு, பெயர்ந்து வருகிறது. தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, தரமான சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜன 09, 2025 21:32

எங்க ஊரில் வைகுண்ட ஏகாதஸிக்காக சரளைக்கல் ஜல்லியைத் தூவி அதன் மேல் தாரை ஒரு கோட்டிங் கொட்டிட்டு போயிட்டாங்க. பத்து நாளைக்கு தாங்குமாங்கறதே டவுட்டு தான். திருட்டு திராவிடனுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை