உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபாச பேச்சு ஆசிரியர் கைது

ஆபாச பேச்சு ஆசிரியர் கைது

அரியலுார்: மாணவியரிடம் ஆபாசமாக பேசிய, அரசுப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் நாகலிங்கம், 50, கைது செய்யப்பட்டார். அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, சீனிவாசநகரை சேர்ந்தவர் நாகலிங்கம். கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர். பிளஸ் 2 மாணவியரிடம் நாகலிங்கம் ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, மிரட்டல் விடுத்தார். ஜெயங்கொண்டம் மகளிர் போலீசில், மாணவியர் அளித்த புகாரில், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து நாகலிங்கத்தை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !